அதிக மக்கள் தொகை கொண்ட சீனா தன் நாட்டின் பால் தேவைக்காக வெளிநாட்டு மாட்டினங்களை சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்காக அதிக பால் கொடுக்கும் குளோனிங் பசுக்களை உருவாக்கியுள்ளது. உலகில் எவவ்ளவு பெரிய கம்பெனியின் பொருளாக இருந்தாலும், எவ்வளவு ரகசியமான தொழில்நுட்பமாக இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்படியே அதன் நகலை தயாரிக்கும் திறமை உலகிலேயே சீனாவிற்குத் தான் இருக்கிறது. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவின் பால் தேவை மிக அதிகம். ஆனால் சீனாவின் பாரம்பரிய இனப் பசுக்கள் பெரிய அளவில் கொடுக்காது. அதனால் வெளிநாட்டு மாட்டனங்களை இறக்குமதி செய்து தனது நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்து வருகிறது சீனா. சீனாவின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் நியூசிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த மாட்டினங்கள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன. இப்படி சீனாவின் பால் தேவையில் 70 விழுக்காடு வெளிநாட்டு மாட்டினங்களால் தான் பூர்த்தியாகிறது. இந்நிலையில், தனது பால் தேவையில் தன்னிறைவை எட்டும் நோக்கில் அதிக பால் கறக்கும் சூப்பர் பசுக்களை குளோனிங் முறையில் உருவாக்கியிருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
இது தொடர்பாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. somatic cell nuclear transfer method என்ற மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியோடு குளோனிங் செய்யப்பட்டு பிறந்த இந்தக் கன்றுகள் 56.7 கிலோ எடை கொண்டதாகவும் 76 செ.மீட்டர் உயரம் கொண்டதாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கறவை மாடுகள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் போன ''Dutch Holstein Friesian breed" என்ன இனத்தில் இருந்து குளோனிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சூப்பர் பசுக்கள் தனது வாழ்நாளில் 100 டன்கள் கொள்ளளவு எடை அளவுக்கு பால் வழங்குமாம். கடந்த 23 ஆம் தேதி சீனாவின் நின்கிக்சியா மாகாணத்தில் குளோனிங்கில் 3 கன்றுக் குட்டிகள் உருவாக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. குளோனிங் முறையில் புதிதாக 3 கன்று குட்டிகளை உருவாக்கும் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி ஜின் யாபிங்க் கூறுகையில், இது மிகப்பெரும் திருப்பு முனையாகும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் சூப்பர் பசுக்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.
அமெரிக்காவில் தீபாவளிக்கு விடுமுறை... பட்டாசு வெடித்தும் கொண்டாடலாம்.. வந்தது புது சட்டம்..!
சீனா குளோனிங் முறையில் பசுக் கன்றுகளை உருவாக்கியுள்ளதை ஒட்டுமொத்த சீன மக்களும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் தனது நாட்டின் பால் தேவையை கருத்தில் கொண்டு சீன அரசு இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China