மனித மூளை மரபணுக்கள் கொண்ட குரங்குகளை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்!

மனிதர்களைப் போன்றே குரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

news18
Updated: April 11, 2019, 7:34 PM IST
மனித மூளை மரபணுக்கள் கொண்ட குரங்குகளை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்!
குரங்கு
news18
Updated: April 11, 2019, 7:34 PM IST
சீன விஞ்ஞானிகள் குரங்குகளுக்கு மனித மூளை மரபணுக்களைச் செலுத்தி சோதனை செய்துள்ளனர்.

மனித மூளை மரபணுவான MCPH1-ஐ சீன விஞ்ஞானிகள் 11 ரீசஸ் குரங்களுக்குச் செலுத்தியுள்ளனர். ரீசஸ் குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களை போன்றே செயல்படக் கூடியவை.

இந்த மரபணுவை குரங்குகளுக்குச் செலுத்திய பின், மனித மூளை போன்ற வளர்ச்சி அடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்பது சோதனை மூலம் தெரியவந்துள்ளது.


மூளை வளர்ச்சியைக் கண்டறிய குரங்குகளுக்கு MRI ஸ்கேனும் செய்து பார்க்கப்பட்டுள்ளது.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மனிதர்களைப் போன்றே குரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன. விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டிலிருந்த குரங்குகளின் மூளை வளர்ச்சியில் நல்ல முன்னேற்றும் இருந்தது. சோதனை முடிவில் 11 குரங்குகளில் 5-க்கு மூளை வளர்ச்சி மனிதர்களுக்கு இணையாக இருந்தது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், குரங்குகளுக்கு மனித மூளையின் மரபணுவை செலுத்தினால் அவை எங்கு தங்கும், எப்படிச் சிந்திக்கும், என்ன செய்யும், மனிதர்களைத் தாக்கினால் என்ன ஆகும். உடனே இந்த ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Loading...

மேலும் பார்க்க:
First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...