• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது: பெண் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் தகவல்

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது: பெண் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் தகவல்

லி-மெங்-யான் - நுண்ணுயிர் ஆராயச்சியாளர்

லி-மெங்-யான் - நுண்ணுயிர் ஆராயச்சியாளர்

சீன அரசின் ஆய்வகத்திலேயேதான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பெண் நுண்ணுயிர் ஆராயச்சியாளர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கி 10 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், அந்த வைரஸ் எங்கு தோன்றியது என்பதே பெரும் கேள்வியாக இருந்துவருகிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள ஊஹான் நகரின் கடல் உணவு சந்தையில் இருந்தே கொரோனா பரவியதாக கூறப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஊஹானின் உள்ள அரசு ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என அந்த நாட்டைச் சேர்ந்த மருத்துவர் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி -மெங்-யான் கூறியுள்ளார். இதற்கு முன்பே இதே குற்றச்சாட்டை பல்வேறு நாடுகளும் முன்வைத்துவந்த நிலையில், அதற்கான ஆதாரங்களை தாம் திரட்டிவைத்துள்ளதாக லி-மெங்-யான் அதிர்ச்சி அளித்துள்ளார்.

    மேலும் படிக்க... 80% செயல்திறனுடன் பாக்டீரியா எதிர்ப்பு கிராபென் முகக்கவசங்கள்: விஞ்ஞானிகளின் நுட்பமான வடிவமைப்பு...

    அமெரிக்கா தப்பித்துச்சென்றுள்ள அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் தொடர்பான தனது ஆராய்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சார்ஸ் வகை வைரஸ் ஒன்று பரவுவதாக மக்களுக்கு தெரியத் தொடங்கும் முன்னதாகவே, வரப்போகும் ஆபத்தை சீன அரசு அறிந்திருந்ததாக லி-மெங்-யான் கூறியுள்ளார்.

    டிசம்பர் மாதத்தில் தான் ஹாங்காங்கில் பணியாற்றிய போது சார்ஸ் போன்ற வைரஸ் கொத்துக்கள் உருவாவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளுபடி உத்தரவிடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அப்போது சீன அரசு அதனை மறைக்கும் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறியுள்ளார்.

    சீனா கொரோனா வைரஸை எதற்காக உருவாக்கியது என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் வெளியிட உள்ளதாக லி-மெங்-யான் தெரிவித்துள்ளார். உயிரியல் தொடர்பான புரிதல் இல்லாதவர்கள் கூட படிக்கும் வகையில் அது இருக்கும் எனவும், மக்களே அதன் உண்மைத் தன்மையை சோதித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க...இந்தியாவில் கோவேக்சின்; ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி - உலக அளவில் தயாரிக்கப்படும் 34 கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?



    மேலும், தனது அடையாளத்தை அழிக்க முயற்சிக்கும் சீனா, தன்னைப் பற்றி வதந்தி பரப்பி வருவதாகவும் லி-மெங்-யான் குற்றம்சாட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: