வகுப்பறையில் தூங்கினால் அலாரம்...! சீருடையில் ‘சிப்’ வைத்த சீனா

மாணவர்கள் பள்ளியில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும், வகுப்பறையில் தூங்கினாலும் அலாரம் அடிக்கும் என்பதால் ஆசிரியர்களும் இந்த திட்டத்தால் நிம்மதி அடைந்துள்ளனர்.

Web Desk | news18
Updated: December 30, 2018, 7:13 AM IST
வகுப்பறையில் தூங்கினால் அலாரம்...! சீருடையில் ‘சிப்’ வைத்த சீனா
நவீன சீருடை (Image: Guanyun Technology)
Web Desk | news18
Updated: December 30, 2018, 7:13 AM IST
பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் வகையிலும், அவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் சீனாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களின் சீருடையில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தியுள்ளது.

ஸ்மார்ட் தொழில்நுட்ப மேம்பாட்டில் மின்னல் வேக பாய்ச்சலில் இருக்கும் சீனா, தற்போது உலகிற்கு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் இருக்கும் குய்ஷு குயான்ஸி மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் சீருடைகள் ‘ஸ்மார்ட்’ ஆக மாறியுள்ளது.

மாணவர்கள் அணியும் வெளிப்புற ஜாக்கெட்டில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிக்கு வந்ததும் தாமாகவே வருகையை பதிவு செய்துவிடும். பள்ளியை கட் அடித்தால் எளிதாக கண்டறியலாம் என்பதால் பெற்றோர்கள் இந்த திட்டத்தால் குஷியடைந்துள்ளனர்.

மாணவர்கள் பள்ளியில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும், வகுப்பறையில் தூங்கினாலும் அலாரம் அடிக்கும் என்பதால் ஆசிரியர்களும் இந்த திட்டத்தால் நிம்மதி அடைந்துள்ளனர். வெறும் வருகைப்பதிவுக்கு மட்டுமல்ல, மாணவர்கள் மாயமானால் கூட இந்த சிப் மூலம் கண்டறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குரங்கிடம் செக்ஸ் சில்மிஷம் - வைரல் வீடியோவால் சிக்கிய பெண்

Also See..

First published: December 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...