ஹோம் /நியூஸ் /உலகம் /

சீன அதிபர் என்ன ஆனார்..? இணையத்தில் உலாவும் செய்திகள் உண்மையா...?

சீன அதிபர் என்ன ஆனார்..? இணையத்தில் உலாவும் செய்திகள் உண்மையா...?

அதிபர் ஜி ஜின்பிங்

அதிபர் ஜி ஜின்பிங்

Chinese President Xi Jinping: சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் கைது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaBeijingBeijingBeijingBeijing

    சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவும் செய்திகளைப் பார்ப்போம்.

    சீனாவைக் குறித்து வெளியாகும் தகவல்களில் சமூக வலைத்தளத்தில் பெரும் அளவு பகிரப்பட்ட வீடியோ பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது. அந்த வீடியோவில் சாலையில் இராணுவ பீரங்கி டாங்குகள் அணிவகுத்துச் செய்வது தெரிகிறது.

    அந்த வீடியோவை பதிவிட்ட நபர் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் வாகனங்கள் ஹுவான்லாய் மாவட்டம் இருந்து புறப்பட்டு ஹெபே மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகோவ் நகரம் வரை கிட்டத்தட்ட 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாகச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

    இதனையடுத்து சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் படைத் தலைவர் லி கியாமிங் தலைமையைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது.

    Also Read : பற்றி எரியும் ஈரான்.. ஹிஜாபிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. இதுவரை 40 பேர் மரணம்

    மேலும் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டு இருக்கும் சீனாவின் முக்கிய நகரங்களின் விமான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் சிலர் நேரடி விமான போக்குவரத்து நெரிசல் தகவலைக் காணொளியாகப் பதிவிட்டு வருகின்றார்.

    தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியான தகவல் குறித்து பலரும் மீம்ஸ் தயார் செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகும் தகவல் வதந்திகளே என்று சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

    Published by:Janvi
    First published:

    Tags: China, Xi jinping