ஹோம் /நியூஸ் /உலகம் /

போரிட்டு வெற்றி பெற தயாராக இருங்கள்.. ராணுவத்திற்கு சீன அதிபர் உத்தரவு

போரிட்டு வெற்றி பெற தயாராக இருங்கள்.. ராணுவத்திற்கு சீன அதிபர் உத்தரவு

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்

தைவான் பிராந்தியத்தை கருத்தில் கொண்டே சீனா அதிபர் ராணுவத்திற்கு இந்த உத்தரவை தெரிவித்துள்ளார் எனக் கருதப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaBeijingBeijing

  சீன ராணுவம் போருக்கு தயார் நிலையில் இருந்து வெற்றி பெறும் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் 2012ஆம் ஆண்டு முதல் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். அந்நாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டத்தில் மூன்றாவது முறையும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் ஜி ஜின்பிங். இதன் மூலம் சீனா வரலாற்றில் மாவோ சேதுங்-கிற்கு பிறகு பெரும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.

  காரணம், சீன அதிபர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், ராணுவ மத்திய கமிஷனின் தலைவர் என்று அந்நாட்டின் மூன்று பிரதான பதவிகளை ஜி வைத்துள்ளார். இந்நிலையில், சீனா ராணுவத்தின் தலைமையகமான மத்திய ராணுவ ஆணையகத்திற்கு நேரில் பார்வையிட்ட அதிபர் ஜி ஜின்பிங், அங்கு திரண்டிருந்த வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "ராணுவம் தனது பயிற்சியை ஒருங்கிணைந்த வகையில் வலுப்படுத்த வேண்டும். எத்தகைய போருக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். போர் புரிந்து வெற்றியை உறுதி செய்ய ஏற்ற வகையில் ராணுவம் தனது சக்தியை திரட்டி தயார் நிலையில் இருக்க வேண்டும்" என அதிபர் ஜின்பிங் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  தைவான் பிராந்தியத்தை கருத்தில் கொண்டே சீனா அதிபர் ராணுவத்திற்கு இந்த உத்தரவை தெரிவித்துள்ளார் எனக் கருதப்படுகிறது. தைவான் தன்னை சுதந்திர தனி நாடாக கூறி வரும் நிலையில், சீனா தைவானை தனது நாட்டின் அங்கம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. தேவைப்பட்டால் சீனா தனது ராணுவத்தை பயன்படுத்தி தைவானை கட்டுக்குள் கொண்டுவரும் என அச்சுறுத்தி வருகிறது.மேலும் தெற்கு சீன கடலில் பல பிராந்தியங்களுக்குச் சீனா அச்சுறுத்தலாக உள்ளது.

  இதையும் படிங்க: இலங்கை அதிபர் ரணிலுடன் லைகா சுபாஷ்கரன் முக்கிய சந்திப்பு.. தமிழ் கைதிகள் குறித்து முக்கிய பேச்சு?

  இந்தியாவுடனும் எல்லை பிராந்தியங்களில் உரசல் போக்கை சீனா சில ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் நிலையில், ஜி ஜின்பிங்கின் இந்த கருத்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் உலக நாடுகளின் அமைதியை சீர்குலைத்துள்ள நிலையில் சீனாவின் நடவடிக்கையும் தற்போது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Army, China, War, Xi jinping