ஹோம் /நியூஸ் /உலகம் /

வீட்டுச் சிறை சர்ச்சைக்குப் பின் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர்

வீட்டுச் சிறை சர்ச்சைக்குப் பின் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர்

சீனா அதிபர் ஜி ஜின்பிங்

சீனா அதிபர் ஜி ஜின்பிங்

சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச்சிறையிலிருந்தாக சொல்லப்பட்ட சர்ச்சைக்குப் பின் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaBeijingBeijingBeijing

  சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச்சிறையில் இருந்ததாகவும் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததாகவும் பரவலாக வதந்திகள் சீனாவைக் குறித்து இணையதளத்தில் கடந்த தினங்களுக்கு முன்பு வேகமாகப் பரவி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் வணிக கண்காட்சியில் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

  மேலும் இரண்டு முறை ஆட்சியிலிருந்த அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறையாகச் சீனா அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘ சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து இறக்கி விட்டனர்’ என்று சீனா சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் வேகமாகப் பரவியது.

  Also Read : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு...

  மேலும் சில நாட்களாகவே சீனாவில் முக்கிய விமான நிலையங்களில் தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வந்துள்ளது. இதெல்லாம் இணைந்து சர்ச்சைகள் பரவிய நிலையில் தற்போது அதிபர் ஜி ஜின்பிங் பொது வெளியில் தோன்றியது வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

  மேலும் கடந்த 16ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் sco மாநாடு முடித்து பெய்ஜிங் திருப்பிய நிலையில் இதுவே அவரின் முதல் அதிகாரப்பூர்வ தோற்றமாக இருக்கிறது. இந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸ் கூட்டம் அக்டோபர் 16 பெய்ஜிங்கில் நடைப்பெறவுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: China, Xi jinping