ஹோம் /நியூஸ் /உலகம் /

சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது? பெய்ஜிங்கில் என்ன நடக்கிறது...வெளியாகும் தகவல்களின் நிலவரங்கள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது? பெய்ஜிங்கில் என்ன நடக்கிறது...வெளியாகும் தகவல்களின் நிலவரங்கள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், ராணுவம் ஆட்சியையும் நாட்டையும் கைப்பற்றியுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internation, IndiaBeijingBeijingBeijing

  சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற என்ற வதந்திகள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவில் என்ன தான் நடக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

  சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ராணுவ வாகனங்கள் தலைநகர் பெய்ஜிங் நோக்கி அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவை விட்டு எங்கும் வெளியே செல்லாமல் இருந்து வந்த அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற SCO மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்று திரும்பியது முதல் இதுவரை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

  இதனால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற தலைவர்கள் மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகச் சீனாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

  சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் கொரோனா காலத்தில் ஜிரோ கொரோனா திட்டத்தில் மூலம் கட்டுப்பாடு நடவடிக்கைகளைச் சீனா மேற்கொண்டு வந்தது. இதனால் பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்ட செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது.

  Also Read : சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது? உண்மை என்ன?

  இந்த நிலையில் தலைநகர் பெய்ஜிங் விமானநிலையத்தில் மட்டும் 59% விமானங்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து இன்று உள்நாட்டுச் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

  சீன அதிபதி ஜி ஜின்பிங் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியே அவரை நீக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெய்ஜிங் பொது போக்குவரத்தும் பதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வந்த வண்ணம் உள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: China, Xi jinping