• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 2008ல் தப்பி பிழைத்து வலிமையின் சின்னமாக புகழப்பட்ட பன்றி மரணம் - சீன மக்கள் அஞ்சலி!

2008ல் தப்பி பிழைத்து வலிமையின் சின்னமாக புகழப்பட்ட பன்றி மரணம் - சீன மக்கள் அஞ்சலி!

பன்றி

பன்றி

அண்டை நாடான சீனாவில் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கியும் தப்பி உயிர் பிழைத்த பிரபலமான பன்றி ஒன்று சமீபத்தில் இறந்துள்ளது.

  • Share this:
 தன்னம்பிக்கை மற்றும் வலிமையின் சின்னமாக சீன மக்களால் பார்க்கப்பட்டு வந்த ஜு ஜியாங்கியாங் (Zhu Jianqiang) என்ற அந்த பன்றி உயிரிழந்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு மே 12ம் தேதி அன்று தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 90,000 பேர் பலியாகியனர் மற்றும் காணாமல் போய்விட்டனர். 2008ம் ஆண்டில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் போது பாதிக்கப்பட்ட இந்த பன்றி தொடர்ந்து 36 நாட்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தது. பின்னர் மன உறுதியுடன் உயிர் பிழைக்க போராடி கொண்டிருந்த இந்த பன்றியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.அவ்வளவு பெரிய பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 36 நாட்கள் உணவு மற்றும் தண்ணீரின்றி உயிர் பிழைத்த பின்னர் சீனாவில் ஒரு தேசிய ஐகானாக மாறியது அந்த 1 வயதே ஆகி இருந்த பன்றி. போராட்ட குணம் மற்றும் தன்மைபிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட அந்த பன்றிக்கு ஜு ஜியாங்கியாங் (வலுவான மனஉறுதி கொண்டது என்று பொருள்) என பெயரிடப்பட்டது.

ALSO READ | ஆதரவின்றி தவித்து வந்த நாயை மீட்டு ஸ்டைலாக மாற்றிய கிளினிக் : அதன் உடம்பில் இருந்து 2.7 கிலோ முடி நீக்கம்!

மீட்கப்பட்ட போது குறைந்த வயதான பன்றி என்பதால் அதன் போராட்ட குணத்தை கண்டு அனைவரும் வியந்தனர். தவிர 1 மாதத்திற்கும் மேலாக ஆகாரம் ஏதும் இல்லாமல் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் அந்த இளம் பன்றி மீட்கப்படும் போது மிகவும் எடை இழந்து காணப்பட்டது. உயிருடன் இந்த பன்றி மீட்கப்பட்ட பின் உயிர்வாழ்வதற்கான விருப்பத்தின் எழுச்சியூட்டும் அடையாளமாக அனைவராலும் புகழப்பட்டது.இதனை அடுத்து செங்க்டு (Chengdu) நகருக்கு அருகிலுள்ள ஜியாஞ்சுவானின் சிச்சுவான் அருங்காட்சியகம் (Sichuan Museum of Jianchuan) அருங்காட்சியகம் 3,008 யுவான் கொடுத்து வீரமிக்க அந்த பன்றியை வாங்கி அதை ஒரு சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலா அம்சமாக வைத்திருந்தது. இந்நிலையில் முதுமை மற்றும் உடல்நலகுறைவு காரணமாக ஜு ஜியாங்கியாங் பன்றி தனது 14 வயதில் இறந்து விட்டதாக அதை பராமரித்து வந்த அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.

ALSO READ | குட்டி யானையின் ’ஆனந்த’ குளியல்! பார்த்தால் மெர்சலாயிடுவீங்க

பன்றி இறந்ததை தொடர்ந்து, சீன மக்கள் அதற்கு சோஷியல் மீடியாக்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். "Strong-Willed Pig has died" என்ற ஹேஷ்டேக் வெய்போவில் 430 மில்லியன் பார்வைகளை கொண்டுள்ளது. வாழ்க்கையின் மகத்துவத்தை சொந்த பலத்துடன் விளக்கியதற்கு நன்றி" என்று ஒரு பயனர் பன்றிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மற்றொரு யூஸர் "RIP நீ வாழ்க்கையின் அதிசயம் மற்றும் வலிமையின் சின்னம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: