• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • 24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

குவோ காங்டாங்

குவோ காங்டாங்

ஒரு கட்டத்தில் குவோ தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மகனின் படத்தை பார்த்ததும் அவர் அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

 • Share this:
  தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. தகப்பனின் கண்ணீரை கண்டோரில்லை.. தந்தையின் அன்பு குறித்த நா.முத்துக்குமாரின் வரிகள் இது.. சீனாவை சேர்ந்த தந்தை ஒருவர் 24 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் மகனை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

  சீனாவின் சாண்டோங் மாகாணத்தை சேர்ந்தவர் குவோ காங்டாங் . 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவரது இரண்டு வயது குழந்தை குவோ சின்ஜென் காணாமல் போய் உள்ளான். வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர். போலீசில் புகார் அளித்தும் எந்தப்பயணும் இல்லை. 1980, 90களில் சீனாவில் குழந்தை கடத்தல் பரவலாக இருந்த காலக்கட்டம் அது.

  Also Read:  Motivational Story: ஆசையும் பேராசையும்..ஓர் வியாபாரியின் கதை..!

  குவோ காங்டாங் காணாமல் போன தன் மகனை தானே தேடுவது என முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மகனின் புகைப்படத்தை மாடிக்கொண்டு தேட ஆரம்பித்துள்ளார். ஒரு நாள் இரண்டு நாள்கள் இல்லை சுமார் 24 வருடங்கள் மகனை தேடி சீனா முழுவதும் தனது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.

  குவோ காங்டாங்


  சீனா முழுவதும் 20 மாகாணங்களை சுற்றியுள்ளார். நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையை முடித்துக்கொண்டு மகனை தேடத்தொடங்கினார். இந்த தேடுதல் பயணத்தில் கொள்ளையர்களையும் எதிர்க்கொண்டுள்ளார். சாலைகளில் உள்ள பாலங்கள்தான் இவரது இரவு நேர உறைவிடம். கையில் பணம் இல்லாத நேரங்களில் பிச்சையெடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் குவோ தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மகனின் படத்தை பார்த்ததும் அவர் அந்த முடிவை கைவிட்டுள்ளார். தனக்கு எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் மகனை கண்டுப்பிடித்தே தீருவேன் என வைராக்கியமாக சுற்றி வந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவரது பயணத்துக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக 2015-ல் வெளிவந்த லாஸ்ட் அண்ட் லவ் திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப்படத்தில் சிறுவயதில் காணாமல் போன மகனை 15 வருடங்கள் சாலையில் அழைந்து திரிந்து தந்தை கண்டுபிடிப்பது போன்று கதைக்களம் அமைந்திருக்கும். இந்தப்படம் குவோ காங்டாங்-க்கு உற்சாகத்தை அளிக்க மனம் தளராமல் மகனை தேடி வந்தார். இந்த பயணத்துக்கு இடையே காணாமல் போன 7 குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

  Also Read: இப்படியும் ஒரு பெண்ணா? கணவரை அம்மா உடன் பகிர்ந்த மகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

  சீனா முழுவதும் தன் மகனை தேடி சுமார் 5 லட்சம் கிலோமீட்டர் சுற்றியுள்ளார் குவோ காங்டாங். இவரதுதேடலின் பலனாக அவரது மகன் தற்போது கிடைத்துள்ளார். காவல்துறையினர் அளித்த தகவலில் குவோவுக்கு அவரது மகன் கிடைத்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். 26 வயதாகும் அவரது மகன் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மகனை சந்தித்த குவோ காங்டாங் மற்றும் அவரது மனைவி  ஆனந்த கண்ணீர் வடித்தனர். இருவரும் மகனை ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  குவோ காங்டாங்


  இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள், என் மகன் எனக்கு கிடைத்துவிட்டான். என் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கும். கடவுள் எங்களை கருணையுடன் நடத்தியுள்ளார்’என தனது மகிழ்ச்சியை குறிப்பிட்டுள்ளார்.

  எல்லோரும் என்னை சிறந்த தந்தை என்கிறார்கள். நான் அப்படி எல்லாம் இல்லை. நான் உதவியற்றவனாக நின்றேன். மிகப்பெரிய துயரங்களை அனுபவித்தபின் வாழ்க்கையை மீண்டும் தொடங்க எனக்கு தைரியம் இல்லை. என் மகனை தேடுவது நிறுத்த எனக்கு காரணம் எதுவும் இல்லை. நாம் எப்படி என் மகனை தேடாமல் இருக்க முடியும். எனவே நான் தொடர்ந்து தேடி வந்தேன் என குவோ காங்டாங் கூறினார். இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் குவோவின் மகனை கடத்தில் அருகில் உள்ள ஹென்ஸ் மாகாணத்தில் விற்று விட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: