லாக்டவுன் விதிகளை மீறியவர்களை சாலையில் துப்பாக்கி முனையில் பதாகைகளுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று சீன போலீசார் அவமதித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மிக தீவிரமான நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே எடுக்கப்பட்டு வருகிறது. ‘ஜீரோ கோவிட்’ என்ற நிலையை எட்டும் நோக்கில் சீன அரசு கடும் விதிகளை பின்பற்றி வந்த போதிலும், வியட்நாமை ஒட்டிய Jingxi நகரில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனையடுத்து அந்நகரில் தீவிரமான லாக்டவுன் விதிகளை சீன அரசு அமல்படுத்தியது.
2020ல் வூகானுக்கு (11 மில்லியன்) பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட நகரில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படுவது Jingxi நகரில் தான். அங்கு வசித்து வரும் 13 மில்லியன் மக்கள் கடுமையான லாக்டவுன் விதிகளுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு வாங்க கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
Also read: நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி - நீதிமன்றத்தில் பரபரப்பு
முன்னர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவுப் பொருள் வாங்க குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அதிகரித்த பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கடந்த திங்கள் முதல் லாக்டவுன் விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டு உணவு வாங்கக் கூட யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (டிச 28) ஒரே நாளில் 175 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் அந்நகரில் 810 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்படுத்திய போதிலும், லாக்டவுன் விதிகளை மீறியதாக 4 பேரை பிடித்த போலீசார், சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் புடை சூழ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். விதிகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ள போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
Also read: 15 பியூன், ஸ்வீப்பர் பணிகளுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்
இது போல பொது இடங்களில் குற்றவாளிகளை அவமதிக்கும் செயல்கள் கடந்த 2010ம் ஆண்டே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சீன போலீசார் மீண்டும் அத்தகைய செயல்களை கையில் எடுத்துள்ளனர்.
இதனிடையே உணவு கிடைக்காமல் பலரும் சீன சமூக வலைத்தளமான வெய்போவில் உணவுப் பொருள் கேட்டு அபயக் குரல்கள் எழுப்பி வருகின்றனர். சீனாவில் நாடு தழுவிய அளவில் 5வது முறையாக மெகா கொரோனா பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.