Home /News /international /

திபெத் மக்களின் டிஎன்ஏ-வை சேகரிக்கும் சீனா அரசு.. வெளியான அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன?

திபெத் மக்களின் டிஎன்ஏ-வை சேகரிக்கும் சீனா அரசு.. வெளியான அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன?

சீனா

சீனா

சீனாவின் அங்கீகாரத்தில் இருக்கும் திபெத்தில் உள்ள குடிமக்களின் டிஎன்ஏ - களை சீனா அரசு சேகரித்துக் கண்காணிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaTibetTibet
    மனித உரிமை கண்காணிப்பு வெளியிட்ட அறிக்கையில் சீனா அரசு திபெத்திய மக்களின் டிஎன்ஏ - களை சேகரித்து அந்த உயிரியல் தரவுகள் மூலம் மக்களை கண்காணிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    திபெத்தியத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்களின் உயிரியல் தரவுகளை முறையான அனுமதி இன்றி சீனா அரசு சேகரித்து வருகிறது என்று திபெத்திய ஊடகம் தெரிவித்துள்ளது. உயிர் பாதுகாப்பு (Bio-Security) என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா, தொழில்நுட்ப கண்காணிப்பில் முனைப்பு செலுத்தி வருகிறது.

    சீனாவின் அங்கீகாரத்தில் உள்ள திபெத், கிழக்கு துர்கிஸ்தான், தெற்கு மங்கோலியா போன்ற பகுதிகளில் பயோ - செக்யூரிட்டி என்ற கொள்கை மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த டிஎன்ஏ - களை சேகரிக்கும் பணி நடைபெறுவதாக திபெத் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

    மனித உரிமை கண்காணிப்பு அளித்த தகவலின் படி, 7 மாகாண அளவிலான பகுதிகளில் 14 தனித்தனி வட்டாரங்களில் இந்த சேகரிப்பு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இது எந்த அளவில் நடைபெற்று வந்துள்ளது என்பது தெரிகிறது. சிறிது காலம் முன்பு சீனா ஆயிரக்கணக்கான உய்குர் முஸ்லிம்களைக் கருத்தடை செய்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது திபெத் மக்களின் டிஎன்ஏ-களை சேகரிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

    சீனாவில் மனிதர்களின் உயிரியல் மாதிரிகளைச் சேகரிப்பது புதிதானது அல்ல. மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்று சீனாவிலும் குற்றவாளிகளின் உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து வைப்பார். இதன் மூலம் சுமார் 100 மில்லியன் மக்களின் உயிரியல் மாதிரி தரவுகள் சீனாவிடம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Also Read : 100-க்கும் மேற்பட்ட பிரிட்டன் திரையரங்குகளில் எலிசபெத் இறுதிச்சடங்கு திரையிடல்.

    மேலும் 2017ம் ஆண்டுக்குப் பின் சீனா அதிபர் ஜி ஜின்பிங் 10% சீனா ஆண்களின் உயிரியல் மாதிரிகளைச் சேகரிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் ஒரே நோக்கம் அவர்களின் உயிரியல் மாதிரிகளை வைத்து உறவினர்களைக் கண்டறிவது. இந்த செயல் பல தரப்பினரால் எதிர்க்கப்பட்டது. சீனாவின் இந்த மனித உரிமை மீறல் ஆதிக்கத்தினால் திபெத்திய மக்கள் தின தினmம்nனmm் வாழ்க்கையில் பெரும் அவதியடைகின்றனர் என்று திபெத் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: China, DNA Test

    அடுத்த செய்தி