சீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜி ஜின்பிங்

news18
Updated: March 11, 2018, 4:29 PM IST
சீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜி  ஜின்பிங்
ஜி ஜின்பிங்
news18
Updated: March 11, 2018, 4:29 PM ISTசீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும் அவர் தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.

சீனாவில் அதிபர் பதவியில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க முடியும். சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இரு முறைக்கு மேல் அதிபராக முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது.Loading...


தற்போது சீன அதிபரராகவுள்ள ஜி ஜின்பிங்  கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலம் வரும் 2023-ம் ஆண்டு முடிவடைகிறது. தற்போது உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர் மீண்டும் அவரால் அதிபராக முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருக்கும் அவர், மன்னராட்சியில் உள்ளது போல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் காலவரையின்றித் தானே அதிபர் பதவி வகிக்க முடிவெடுத்தார். அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தங்கள்  கொண்டு வர, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் தொடர்ந்து நீடிக்கும் வகையில், இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று ரத்து செய்தது. இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, மொத்தமுள்ள 3,000 பேரில் 2958 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் தற்போது ஜி ஜின்பிங் இறக்கும் வரையில் அதிபர் பதவியில் நீடிக்கப் போகிறார்.


First published: March 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்