சீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் திருவிழா.. ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டியது..

சீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் திருவிழா

சீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் கலாச்சாரத் திருவிழாவான காலா மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் களைகட்டியது.

 • Share this:
  நாம் காண்பது நிஜமா அல்லது கனவா என ஒரு நிமிடம் திகைத்துப் போகும் வகையில் நிகழ்ந்திருக்கிறது சீனாவின் கலாச்சார திருவிழாவான காலா.. சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வசந்தத்தை வரவேற்கும் இந்த விழா பெய்ஜிங்கில் ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டியது. அதிலும் ரோபோ வேடத்தில் கலைஞர்கள் அசத்தலாக நடனமாடினர்.

  நடிகரும் திரைப்பட இயக்குநருமான Wu Jing நிகழ்த்திய குங் பூ தற்காப்புக் கலை சாகசம் ஜாக்கிசான் படங்களை நினைவுபடுத்தியது. நகைச்சுவை, ஓரங்க நாடகம் என பல நிகழ்வுகள் அரங்கேரினாலும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது நடனங்கள்தான்... அந்தரத்தில் பறந்து ஆட்டம்போட்டது கலைஞர்கள் மட்டுமல்ல... கணினியில் வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் தேவதைகளும், பட்டாம்பூச்சிகளும்தான்...

  5 ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சொர்க்கத்தில் மிதப்பதுபோல பாரம்பரிய உடையில் தோன்றினார்கள் சீன அழகிகள். மயில்கள் பெண்களானதா... பெண்கள் மயில்களானார்களா என கண்டுபிடிக்க முடியாததுபோல் இருந்தது மயில் நடனம்... பழங்குடியினர் நடனத்தின்போது அரங்கமே அதிர்ந்தது... பாடலின் பின்னணியில் சீனாவின் படை பலம் காட்சியாக விரிந்தது.

  மேலும் படிக்க...கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 45 சீன வீரர்கள் பலியானது உண்மைதான்: ரஷ்ய செய்தி நிறுவனம் திட்டவட்டம்

  உலகம் முழுவதும் 170 நாடுகளில் 600 தொலைக்காட்சி சானல்கள் மூலம் சுமார் 50 கோடி பேர் கலாச்சார திருவிழாவை கண்டு களித்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: