Home /News /international /

கின்னஸ் சாதனை : உலகிலேயே உயரமான கட்டிடத்தில் உள்ள உணவகம் எங்கு உள்ளது தெரியுமா?

கின்னஸ் சாதனை : உலகிலேயே உயரமான கட்டிடத்தில் உள்ள உணவகம் எங்கு உள்ளது தெரியுமா?


கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

China : உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் உள்ள உணவகம் என்ற கின்னஸ் சாதனையை ஷாங்காயில் அமைந்துள்ள உணவகம் ஒன்று படைத்துள்ளது.

கட்டட கலையில் மனிதர்கள் அசாதாரணமான உயரத்தை எட்டி வருகின்றனர். வானுயர்ந்த கட்டிடங்கள், அதிநவீன வசதிகள், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் என பொறியியல் தொழில்நுட்பம் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது. சீனாவில் இது போன்ற ஒரு பொறியியல் அதிசயம் கின்னஸ் சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் ஜே ஹோட்டல் ஷாங்காய் டவரில் 120வது மாடியில் அமைந்துள்ள ஹெவன்லி ஜின் உணவகம் உலகிலேயே மிக உயரமான உணவகம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த உணவகம் தரையில் இருந்து சுமார் 556.36 மீட்டர், அதாவது 1,825 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

ஜே ஹோட்டல் ஷாங்காய் டவர் 2021ம் ஆண்டு திறக்கப்பட்டது இந்த தளத்தில் உள்ள ஓட்டல், 632 மீட்டர் அல்லது தரையில் இருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் உள்ள கோபுரத்தின் மேல் தளங்களில் அமைந்துள்ளது. இந்த கோபுரம் தான் ஷாங்காய் கோபுரத்தை சீனாவின் மிக உயரமானதாகவும், உலகின் மூன்றாவது உயரமான கோபுரமாகவும் மாற்றியுள்ளது. எனவே கின்னஸ் சாதனை புத்தகம் அதிகாரப்பூர்வமாக இதனை "ஒரு கட்டிடத்தில் உள்ள மிக உயரமான உணவகம்" என அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : வினோத உணவு சேர்க்கை ட்ரெண்டில் இணைந்த மேகி நூடுல்ஸ்.! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

ஹெவன்லி ஜின் உணவக நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “இது பார்வையாளர்களுக்கு ஷாங்காய் நகரின் நம்ப முடியாத டாப் வியூ காட்சிகளை கொடுக்கிறது. உணவகம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே உயர்தர சாப்பாடு மற்றும் சேவைக்காக வாடிக்கையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேகங்களுக்கு மேல் அமந்து உணவு சாப்பிடுவது போன்ற அனுபவத்தை பெற உலகம் முழுவதிலுமிருந்து வரும் விருந்தினர்கள் மற்றும் நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

 




 

மல்டி கசின் உணவமான இதில், நவீன ஐரோப்பிய, சிறந்த சீன மற்றும் ஜப்பானிய உணவு வகைகள் சிறந்த சமையல்காரர்களைக் கொண்டு, விதவிதமான உணவு வகைகள் உருவாக்கப்படுகிறது. விருந்தினர்களை வரவேற்பதற்காக சில்க் ரோடு தீமில் 30 மீட்டர் நீளம் கொண்ட இத்தாலிய மொசைக் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் உள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் 122வது மாடியில் அமர்ந்திருக்கும் அட்மாஸ்பியர் என்ற நட்சத்திர ஓட்டல் 2011ம் ஆண்டு படைத்த சாதனையை ஹெவன்லி ஜின் முறியடித்துள்ளது. அட்மாஸ்பியர் நட்சத்திர ஓட்டலை விட, ஹெவன்லி ஜின் 100 மீட்டர் உயரத்தில் இருப்பதால் உலகிலேயே உயரமான கட்டிடத்தில் உள்ள உணவகம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள் :  பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து விபரீத சாதனை முயற்சி செய்த இளைஞர்!
 ஜே ஹோட்டல் ஷாங்காய் டவர் சீனாவில் உள்ள மிக உயரமான கட்டிடம் ஆகும். மேலும் துபாயின் புர்ஜ் கலீஃபாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. புர்ஜி கலீபா மற்றும் ஹெவன்லி ஜின் கட்டிடங்களில் உள்ள உணவகங்கள், உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் என்ற பெருமையை மட்டுமே பெற்றுள்ளன. உலகின் மிக உயரமான உணவகம் பொலிவியாவின் சாகல்டயா உணவகம் ஆகும், இது 5340 மீட்டர் உயரத்தில் உள்ள சாகல்தாயா ஸ்கை ரிசார்ட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: China

அடுத்த செய்தி