உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பனிச் சிற்பங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் 1963- ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஹெய்லாங்ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின் நகரில் பனிச் சிற்ப திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பனிச் சிற்ப திருவிழா பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருவிழா அங்கு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
4 லட்சம் சதுர மீட்டர் அளவிலான மிகப்பெரிய நிலப்பரப்பில் வகைவகையான பனிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 65 வகையான சிற்பங்களை காட்சிப்படுத்த 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நினைவுப்படுத்தும் 42 மீட்டர் உயரம் கொண்ட டார்ச் வைக்கப்பட்டுள்ளது. 24-வது குளிர்கால போட்டிகளை குறிக்கும் வகையில், 24 படிக்கட்டுக்ளுடன் ஒலிம்பிக்ஸ் டார்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு Top of the Fire என பெயரிடப்பட்டுள்ளது.
இதேப்போல், மற்ற கண்டங்களில் உள்ள அரண்மனைகள், மாட மாளிகைகள், நினைவுச் சின்னங்கள் ஆகியவையும் தத்துருபமாக, கண்கவர் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன
ரஷ்யாவின் கிரெம்ளின் அரண்மனை, மெக்சிகோவின் மாயன் நாகரிகத்தை குறிக்கும் குகல்கன் பிரமிட் ஆகியவை மக்களை அதிகம் கவர்நத நினைவுச் சின்னங்களாக உள்ளன.
சீனாவில் குளர்காலம் முடியும் வரை அதாவது பிப்ரவரி மாதம் 28- ஆம் தேதி வரை பனிச் சிற்ப திருவிழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக நீச்சல் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் முழுவதிலும் இருந்த 1 கோடி பேர் ஹார்பின் நகருக்கு வருகை தருவார்கள் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China