நிலவிலிருந்து பூமிக்கு புறப்பட்ட சீன விண்கலம்.. பாறை துகள்களை சுமந்து வருகிறது..

நிலவிலிருந்து பூமிக்கு புறப்பட்ட சீன விண்கலம்.. பாறை துகள்களை சுமந்து வருகிறது..

நவம்பர் 24ல் ஏவப்பட்ட சேஞ்ச்5 விண்கலம்

நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 24-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

 • Share this:
  நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்குள்ள பாறை துகள்கள், மண் உள்ளிட்டவைகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு புறப்பட்டது. நிலவில் உள்ள பாறை, மண் மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சாங்கி-5 என்ற விண்கலத்தை, கடந்த 25ஆம் தேதி சீனா விண்ணில் ஏவியது. டிசம்பர் 1-ல் நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கிய லேண்டர், அங்கு கற்கள்,மண் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்தது. அதன்பின்னர் டிசம்பர் 3ஆம் தேதி புறப்பட்டு, நிலவை சுற்றிக் கொண்டிந்த விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப்பாதை பூமியை நோக்கி திரும்பியதாக சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...அமெரிக்காவில் நர்ஸ்க்கு முதலாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

  சாங்கி- 5 விண்கலம் வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கப்பட்டால், ரஷ்யா, அமெரிக்காவிற்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய பெருமையை சீனா பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: