ஹோம் /நியூஸ் /உலகம் /

சமரசம் உலாவும் இடமோ?...பைடன்-ஜி ஜின்பிங் முதல்முறையாக சந்திப்பு…

சமரசம் உலாவும் இடமோ?...பைடன்-ஜி ஜின்பிங் முதல்முறையாக சந்திப்பு…

அமெரிக்க- சீன அதிபர்கள் சந்திப்பு

அமெரிக்க- சீன அதிபர்கள் சந்திப்பு

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internat, Indiabali

  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ  பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இந்தோனசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து  பேச உள்ளனர். மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தோனேசியா சென்றுள்ளனர்.

  இந்நிலையில் தான் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல் முதலாக ஜோபைடன், ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்,  தைவான் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா, அமெரிக்க நாடுகள் எதிரெதிர் நிலைப்பாடுகள் கொண்டவையாக உள்ளன. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா-சீனா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

  பேச்சு வார்த்தையின் போது பைடனும் ஜி ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இருவரின் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாகவும், உலக பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், சுகாதார பாதுகாப்பிற்காகவும் இரண்டு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

  தைவான், ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஜோபைடன் கவலை தெரிவித்ததாகவும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை இரு தலைவர்களும் கண்டித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுதப் போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதில் இரு தலைவர்களும்

  உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  தைவானை கைப்பற்ற சீனா முயலும் நிலையில் அமெரிக்கா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் உக்ரைன் பக்கம் அமெரிக்கா உள்ள நிலையில் ரஷ்யாவுடன் சீனா நட்பு பாராட்டி வருகிறது. இப்படி முரண்பட்ட நிலையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இருநாடுகள் இடையேயான மோதல் போக்கை சற்று தணிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தான் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Joe biden, Xi jinping