• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நம்பிக்கையூட்டும் வகையில், மீண்டும் புத்துயிர் பெற்றது சீனாவின் ஊஹான் நகரம்..!

நம்பிக்கையூட்டும் வகையில், மீண்டும் புத்துயிர் பெற்றது சீனாவின் ஊஹான் நகரம்..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் தங்களின் பயணங்களை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள சீனாவின் ஊஹான் நகரத்தில், மீண்டும் மக்கள் வெளிச்சம் படர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸின் பிறப்பிடமாக அறியப்படும் சீனாவின் ஊஹான் நகரம், கடந்த மூன்று மாதங்களாக முடங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஊஹான் நகரத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

    ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் தங்களின் பயணங்களைத் தொடங்கியுள்ளனர். அனைத்துப் பயணிகளும் தெர்மல் ஸ்கேனிங் செய்த பின்னரே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். குடும்பத்தினரைப் பிரிந்திருந்த பலர், மீண்டும் அவர்களைச் சந்திப்பதற்காகப் பயணித்து வருகின்றனர்.

    கொரோனா தொற்றால் நூறு நாட்களுக்கும் மேலாக துயில் கொண்டிருந்த ஊஹான் நகரம், உலக நாடுகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: