• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கட்டுக்குள் வந்தது கொரோனா பாதிப்பு: இயல்பு நிலைக்குத் திரும்பும் ஊஹான்..!

கட்டுக்குள் வந்தது கொரோனா பாதிப்பு: இயல்பு நிலைக்குத் திரும்பும் ஊஹான்..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • Share this:
    கொரோனா தாக்குதலால் 11 வாரங்கள் முழுமையாக முடக்கப்பட்டிருந்த ஊஹானில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    சீனாவின் ஊஹான் நகரிலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் வேகவேகமாகப் பரவிய கொரோனா வைரசால் இன்று உலகமே அச்சத்தில் உறைந்து போயுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், சீனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல்  திண்டாடியது.

    பின்னர் சீனா, ஊஹான் மாகாணத்தை முடக்கியது. சீனாவின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது கணிசமாக கொரோனா அங்கு கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தாக்குதலால் 11 வாரங்கள் முழுமையாக முடக்கப்பட்டிருந்த ஊஹானில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    சாலைகளில் மக்கள் நடமாட்டம் இயல்பாக உள்ள நிலையில் வணிக வளாகங்கள், உணவகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

    சுவையான நூடுல்ஸுக்கு பேர் போன ஊஹானில்  மருத்துவப் பணியில் இருந்த ஊழியர்கள் பொதுவெளிக்கு வந்து நூடுல்ஸை வாங்கி ருசிக்கும் காட்சிகள் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.



    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: