ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்... அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்... அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 46 சதவீதம் சீனாவை சென்றடைவதாக 2020-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார, தொழில்நுட்ப தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. இதிலிருந்து மீள்வதற்கு சீனா உதவி செய்தால் அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை செய்துள்ளார்.

நாளை சீன தூதுவர் யங் ஜியேச்சியுடன் சல்லிவன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இத்தகைய எச்சரிக்கை சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு சீனா வழங்கி வரும், உதவிகளை அமெரிக்கா கண்காணித்து வருவதாக சல்லிவன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்க செய்தியாளர் சுட்டுக்கொலை

சீனா மட்டும் அல்லாமல் உலகின் எந்த நாடும் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை எதிர்கொள்ள உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகம், போக்குவரத்து, பொருட்கள் விநியோக சங்கிலி உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.

இதையும் படிங்க - ரஷ்யாவில் நாளை முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்குக்குத் தடை... 8 கோடி யூசர்களுக்கு பாதிப்பு

ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 46 சதவீதம் சீனாவை சென்றடைவதாக 2020-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாற்றப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. மேற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக அங்கு செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலையை சீரடைவதற்கு ஏற்ப தூதரகத்தை அங்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Russia - Ukraine