”மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்; பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்” அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

"அமெரிக்காவின் 80 சதவீத தாதுப்பொருள் தேவைகளை சீனா நிறைவு செய்கிறது. அதை நிறுத்தப் போவதாக ஏற்கெனவே மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது"

news18
Updated: August 4, 2019, 11:58 AM IST
”மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்; பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்” அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்
news18
Updated: August 4, 2019, 11:58 AM IST
21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்களது ஏற்றுமதி பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்திருப்பது கண்டு அஞ்சமாட்டோம் என்றும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் சீனா கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு பனிப்போர் பல காலமாக நீடித்து வந்தாலும், கடந்த 2018 மார்ச் மாதத்தில் சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் மற்றும் 25 சதவீதம் என இரு விகிதங்களில் அமெரிக்கா கூடுதல் வரி விதித்தபோது மோதல் பூதாகரமானது.

அதைத் தொடர்ந்து 128 அமெரிக்க பொருட்கள் மீது சீனா 10 சதவீதம் மற்றும் 15 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது. இடையே சமரசம் ஏற்பட்டாலும் அமெரிக்கா அவ்வப்போது தொடர்ந்து வரி விதித்து வருகிறது.

சீனாவின் நீண்ட கால தவறான போக்கை அடக்கவே டிரம்ப் இந்நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கூறியுள்ள நிலையில், இந்த பிளாக்மெயிலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்றும் பின்விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் என சீனா நெஞ்சை நிமிர்த்தியுள்ளது.

கடந்த மே மாதத்தில் 60 பில்லியன் டாலர் அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரி விதித்ததை போல் சீனா மீண்டும் செய்யக்கூடும்.

எனினும் சீனா அதிகபட்சம் 120 பில்லியன் டாலர்கள் அளவிலான அமெரிக்க பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்கிறது. ஆனால் 540 பில்லியன் டாலர் அளவிலான தனது அமெரிக்க ஏற்றுமதிக்கு சீனா விலை தரவேண்டியிருக்கும்

அமெரிக்காவின் 80 சதவீத தாதுப்பொருள் தேவைகளை சீனா நிறைவு செய்கிறது. அதை நிறுத்தப் போவதாக ஏற்கெனவே மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சீனாவில் யுவான் கரன்சியின் மதிப்பை குறைக்கவும் சீனா முயலக்கூடும். அதன் மூலம் அமெரிக்க இறக்குமதி வரிகளின் தாக்கத்தை குறைக்கமுடியும்,

இதுபோல் டெஸ்லா, ஆப்பிள், போர்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில பல நூறு கோடி டாலர்களை குவித்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்கனவே சீனா கிடுக்குப்பிடி போட்டுள்ள நிலையில், மேலும் நெருக்கடி தர சீனா முடிவெடுக்கும்.

இரு பொருளாதார வல்லரசுகள் மோதலால் சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் மறுக்கமுடியாது.

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...