சர்வதேச அளவில் சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் பல்வேறு சர்ச்சையான விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால் புதிய தொடக்கமாக சீனா அமெரிக்காவுடனான தனது மோதல் போக்கில் இந்தியாவை இழுத்துவிடப்பார்க்கிறது. அதன் தொடக்கமாகத் தான் இந்திய-சீன எல்லைப் பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவி வருவதாகவும், இந்திய எல்லையை ஒட்டி சீனா கட்டுமானங்களை ஏற்படுத்தி இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவாதகவும் இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இதே போல் சீனாவின் பிராந்தியத்திற்குள் இந்தியா ஊடுருவி வருவதாக குற்றம் சாட்டி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே இருந்த பிரச்னை கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திற்கு பிறகு உலகறிந்த விவகாரம் ஆனது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகள் ஊடுருவி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய போது, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தங்களின் கண்டனத் பதிவு செய்திருந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் அமெரிக்கா இப்போது எல்லைப் பிரச்னையில் தலையிடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் சுமூக தீர்வு கிடைக்கும் என அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்திருந்தது. இதன் நீட்சியாக இப்போதும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக பேசக் கூடும் என்பதால் சீனா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மட்டுமல்லாமல், எல்லையோரத்தில் பல பகுதிகளில் சீன ரணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. மேலும், இந்திய எல்லையோரப் பகுதகளில் சாலை அமைத்தல், செல்போன் கோபுரம் அமைத்தல் என்பதோடு கிராமங்களையும் கட்டமைத்து வருவதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருவதால் இரண்டு நாட்டு படைகளும் எல்லைப் பகுதிகளில் இருந்து பின்வாங்கவில்லை. படைகளை திரும்ப பெறுவது தெடர்பாக இரண்டு நாடுகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஆனாலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால் எலலைப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.