மோதல் உலகிற்கே அழிவை உண்டாக்கும் - அமெரிக்காவுக்கு சீனா பதில்

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரங்களுக்குள் மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அதற்கு சீன தூதர் இந்த மோதல் உலக அழிவிற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோதல் உலகிற்கே அழிவை உண்டாக்கும் - அமெரிக்காவுக்கு சீனா பதில்
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம்
  • Share this:
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரங்களுக்குள் மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ள நிலையில், தாங்கள் தவறு செய்திருந்தால் அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு சீன தூதர் கெய் வீ அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகின் இரு பெரும் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் மோதிக்கொள்வது இந்த இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகிற்கே அழிவை உண்டாக்கும் என்றும் கெய் வீ கூறியுள்ளார்.

மேலும் படிக்க...


இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 45,720 தொற்று

சீன தூதரகம் உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி அதனை மூட அமெரிக்கா உத்தரவிட்டது மூர்க்கத்தனமானது என்று கருத்து தெரிவித்த சீனா, இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading