கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட வூகான் - 11 ஆயிரம் மாணவர்கள் முகக் கவசம், சமூக இடைவெளியின்றி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

கல்லூரி மாணவர்கள்

வூகான் நகரில் மாஸ்க் கூட அணியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

 • Share this:
  உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூகான் நகரில் முகக் கவசம், தனிமனித இடைவெளியின்றி 11 ஆயிரம் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் 2வது, மூன்றாவது அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

  Also Read: Covid -19 : ஆம்புலன்ஸ் ஓட்டுவது பதற்றமாகத்தான் இருந்தது - கொரோனா தொற்றால்உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் கல்லூரி மாணவி

  இந்தசூழலில் சீனாவின் வூகான் நகரில் நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, முகக் கவசம், தனிமனித இடைவெளி என கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் 11 ஆயிரம் மாணவர்கள் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காத 2 ஆயிரத்து 200 பேர் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ”நீந்தும் மீன்களுக்கு கடலில் எல்லை இல்லை” என்ற சீனாவின் பழமையான பழமொழியுடன் மாணவர்களை வரவேற்று பேனரும் வைக்கப்பட்டிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உலகில் முதல் முறையாக வூகான் நகரில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து வூகானில் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 76 நாட்களுக்கு பின் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாகவே பட்டமளிப்பு போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.

  இந்நிலையில், வூகான் நகரில் மாஸ்க் கூட அணியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த காணொலியை காண்போருக்கு அதிர்ச்சி கலந்த அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 20 என்ற நிலையில் உள்ளது. அங்கு தொற்று பாதிபால் 4 ஆயிரத்து 636 பேர் மரணமடைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: