ஹோம் /நியூஸ் /உலகம் /

23000 கிலோ எடையுடைய சீனாவின் ராக்கெட் உதிரிப்பாகங்கள் பூமியில் விழுந்தது - எங்குத் தெரியுமா?

23000 கிலோ எடையுடைய சீனாவின் ராக்கெட் உதிரிப்பாகங்கள் பூமியில் விழுந்தது - எங்குத் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

23டன் சீனாவின் ராக்கெட் விண்ணில் இருந்து பூமிக்குத் திரும்பிய நிலையில் அது எங்கு விழும் என்று சீனா தெரியாது என்று கூறியிருந்தது. இந்த நிலையில் சீனாவில் ராக்கெட் தற்போது பூமியில் விழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaChinaChina

  சீனாவின் கட்டுபாட்டை இழந்த 23 டன் ராக்கெட்டின் உதிரிப்பாகங்கள் பூமியின் பசிபிக் கடலில் விழுந்தது.

  சீனா விண்வெளியில் தனக்கு என்று விண்வெளி ஆராய்ச்சி கூடத்தைக் கட்டி வருகிறது. இந்த நிலையில் அதற்காக மெங்க்டியன் என்ற கடைசி தொகுதி பூமியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. அதற்கு லாங் மார்ச் 5பி என்று பெயர் சூட்டப்பட்டது.

  தானாக தரையிறங்கும் இயக்கம் சரியாக வடிவமைக்கப்படாததால் லாங் மார்ச் 5பி (Long March 5B )கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விண்வெளி பாதையில் நுழைந்தது. இதனைக் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் உலகிற்கு எச்சரிக்கை விடுத்தது.

  சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் 22 டன் எடை கொண்ட ஒரு பகுதி பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அது பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை அடுத்து ராக்கெட் எங்கு விழும் என தெரியாது என்று சீனா கைவிரித்தது.

  ராக்கெட் உதிரிப் பாகம் எங்கு விழும் என்று கண்டுபிடிக்கச் சீனாவிடம் ராக்கெட் தொழில்நுட்ப விவரங்களைக் கேட்டும் சீனா தரமறுத்துவிட்டது.

  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ராக்கெட்டின் 22 டன் எடையுடைய உதிரிப் பாகத்தின் மீதிகள் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. பூமியில் நுழையும் போதே ராக்கெட்டின் உதிரிப் பாகம் எரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டதில், முழுமையாக எரியாமல் கடலில் விழுந்துள்ளது. இதனால் அந்த வான்வெளியில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

  Also Read :என்னை கொல்ல பாகிஸ்தான் அரசும், ராணுவமும் கூட்டு சதி... இம்ரான் கான் போலிஸில் புகார்

  கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா ராக்கெட்டின் உதிரிப் பாகங்கள் நிலைதடுமாறி பூமியில் விழுவது இது 4வது முறையாகும். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளன. தற்போது ராக்கெட்டின் உதிரிப்பாகங்கள் கடலில் விழுந்தது என்றதால் உயிர்ச் சேதம் ஏதுமில்லை. ஆனால் சீனாவில் இந்த நிலை நீடித்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று விண்வெளி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: China