ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனாவை விரட்ட பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறும் சீனா

கொரோனாவை விரட்ட பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறும் சீனா

பாரம்பரிய மருத்துவத்திற்கு திரும்பும் சீனா

பாரம்பரிய மருத்துவத்திற்கு திரும்பும் சீனா

அதிவேக கொரோனா பரவல், மருந்துகள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் சீனாவில் மக்கள் பாரம்பரிய மருந்துகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2020ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா நோய்க்கிருமி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி, லட்சக் கணக்கான உயிர்களை பலி வாங்கியது. 2021 ஆம் ஆண்டு வரை கொரோனா நோய்த்  தொற்றின் தாக்கம் இருந்தது. 2022ஆம் ஆண்டு மெல்ல குறைந்து தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா நோய் கிருமி 95 விழுக்காடு இல்லாமல் போய் விட்டது. ஆனால் கடந்த ஆண்டு மத்தியில் சீனாவில் கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது.

இதையடுத்து ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையின் கீழ் சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பெரும்பாலான நகரங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஊரடங்கிற்கு எதிராக சீனா முழுவதும் பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் இறங்கியதையடுத்து, கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் சீன அரசு அனைத்து விதமான கடடுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டது. இதனால் மீண்டும் கொரோனா தொற்றும் முழு வேகத்தில் பரவி வருகிறது.

தற்போதைய நிலரவப்படி ஒவ்வொரு நாளும் ஐம்பதாயரிம் பேர் வரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு கடந்த டிசம்பர் தற்போது வரை ஒரு மாதத்தில் மட்டும் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும், உயிர் காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தற்போது அந்நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

மூலிகை மருத்துவம், மூலிகை எண்ணெய் மசாஜ், அக்குபங்சர் மற்றும் உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று பரவிய தொடக்க காலத்திலேயே சீன அதிபர் ஜி ஜின்பிங் பாரம்பரிய மருத்துவமுறைகளை ஊக்கப்படுத்தினார். தற்போது அதிக அளவிலான பொதுமக்கள் அந்த மருத்துவமுறைகளை கடைப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் கொரோனாவிற்கு எதிராக நல்ல முறையில் செயலாற்றுவதாகவும், சுவாசக் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா இணை நோய்களுக்கு இந்த முறை மருத்துவம் நல்ல பலன்களை கொடுப்பதாகவும் பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கொண்டு கொரோனா  நோய்  தாக்கத்தில் இருந்து முற்றிலும் குணமடையலாம் என்றும் சீன மக்கள் நம்புகிறார்கள்.

First published:

Tags: China, Covid-19