2020-ல் நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் செயற்கை நிலா: சீனா மும்மரம்!

செயற்கை நிலா

  • News18
  • Last Updated :
  • Share this:
2020-ல் நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் செயற்கை நிலாவை விண்ணுக்கு அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

2020ஆம் ஆண்டுக்குள் செயற்கை நிலா திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒளிரும் செயற்கை கோளை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது. மின்சிக்கனம் மற்றும் தெரு விளக்குகளுக்கு மாற்றாக இந்தத் திட்டத்திற்காக சிச்சுவான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள செங்டு நகரில் மின்னும் செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டில் இந்த செயற்கை கோள் சிச்சுவானில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

நிலா போல் ஒளிரும் இந்த செயற்கைகோள், நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் என்றும் 50 சதுர கிலோ மீட்டர் தூரம் வெளிச்சம் கிடைக்கும் என்றும் சீனா கூறியுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டு மேலும் 3 செயற்கைகோள்களை ஏவவும் சீனா திட்டமிட்டு உள்ளது. வணிக ரீதியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் சீனா முடிவு செய்து உள்ளது.

Published by:Ilavarasan M
First published: