Home » News » International » CHINA TO BUILD A SUPER DAM ON ITS PART OF BRAHMAPUTRA RIVER VJR

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை அமைக்கும் சீனா

புதிய அணை கட்டும் பணியில் தீவிரம் காட்டி வரும் சீனா,  இத்திட்டம் நீர்வளம் மற்றும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் என விளக்கம் அளித்துள்ளத

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை அமைக்கும் சீனா
கோப்பு படம்
  • Share this:
பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா கட்டவுள்ள புதிய அணையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தின் நீராதாரம் பாதிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மழை, வெள்ள காலங்களில் பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் நதிகளின் நிலவரங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்தியா மற்றும் சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரம்மபுத்திரா நதி நிலவரத்தை ஆண்டு தோறும் மே 15ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை இந்தியாவுக்கு சீனா வழங்கி வருகிறது.

இந்நிலையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட திபெத் மாகாணத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை அமைத்து, நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனா செயல்படுத்த உள்ளது. அந்நாட்டின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின்படி, அடுத்த ஆண்டு அணை அமைக்கும் பணியை சீனா தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


திபெத்தில் ''யர்லாங் சாங்போ'' என அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதி, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலபிரதேசம், அசாம் வழியாக வங்கதேசத்துக்கு செல்கிறது. இந்நிலையில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா அமைக்கும் புதிய அணையால், வடகிழக்கு மாநிலங்களுக்கும், வங்கதேசத்துக்கும் நீராதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய தரப்பின் கவலை சீனாவின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் புதிய அணை கட்டும் பணியில் தீவிரம் காட்டி வரும் சீனா,  இத்திட்டம் நீர்வளம் மற்றும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் என விளக்கம் அளித்துள்ளது. அணை அமைப்பது தொடர்பான முழு விவரம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழி மின்சாரம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வரும் சீனா, 2015ம் ஆண்டு திபெத்தில் 1 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பில் நீர் மின்சார நிலையத்தை அமைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது புதிய நீர் மின்சார மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திபெத் மாகாணத்துக்கு ஆண்டு தோறும் 300 கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.ஏற்கனவே இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், புதிய அணை கட்டும் திட்டம் இருநாடுகளுக்கும் இடையேயான மனக்கசப்பை அதிகரிக்கும் என்றே பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading