கனடா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சீனா எச்சரிக்கை

வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ஹுவாய் நிறுவனம் அந்நாடுகளுடன் வணிக ரீதியான உறவு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

Web Desk | news18
Updated: December 10, 2018, 6:40 AM IST
கனடா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சீனா எச்சரிக்கை
சீனாவின் அதிபர் ஜி ஜின் பிங்
Web Desk | news18
Updated: December 10, 2018, 6:40 AM IST
கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிடில், அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய்-ன் தலைமை நிதி அதிகாரியாக இருப்பவர் மெங்வான் ஜவ். அந்நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளான இவர் கடந்த வாரம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ஹுவாய் நிறுவனம் அந்நாடுகளுடன் வணிக ரீதியான உறவு கொண்டிருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.


கைது செய்யப்பட்ட ஹூவாய் தலைமை நிதி அதிகாரி


அமெரிக்காவின் நிர்பந்த்தாலே மெங்வான்-ஐ கனடா அரசு கைது செய்துள்ளதாக கூறப்பட்டது.

கனடாவில் கைதான அவர், அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கனடாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. “மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்” என்று சீன வெளியுறவு துணை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading...

இவ்விவகாரம் தொடர்பாக சீனாவுக்கான கனடா தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
First published: December 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...