ஹோம் /நியூஸ் /உலகம் /

சீன நாட்டின் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க தயாராகும் பிரமாண்ட ஏற்பாடுகள்!

சீன நாட்டின் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க தயாராகும் பிரமாண்ட ஏற்பாடுகள்!

Year Of The Tiger | சந்திர புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கடந்த ஆண்டு ஓலாங் தேசிய பூங்காவில் பிறந்த 20 பாண்டா குட்டிகள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சீன நாட்டின் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேற்கத்திய நாடுகளின் புத்தாண்டு தொடக்கம் சூரியனைச் சுற்றும் பூமியின் சுற்றுப்பாதையின் அடிப்படையில் க்ரிகோரியன் நாள்காட்டியின்படி அமைகிறது. சீன புத்தாண்டோ பூமியைச் சுற்றும் நிலவின் கோளப்பாதையின் படி தீர்மானிக்கப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டில் சீனப் புத்தாண்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு புலி ஆண்டு எனவும் புலி வடிவம் மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் எனவும் மக்கள் நம்புகின்றனர். புலி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளனர்.

Also read:  கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்

பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உறவுகளுடன் இணைய தொடங்கியுள்ளனர். இதற்காக ரயில்கள், படகுகள், பேருந்துகள் மற்றும் விமான நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். ஜனவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி இறுதி வரை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான தின்பண்டங்கள் தயாரிக்கும் பணிகளும் களைகட்டியுள்ளன. பூசனி, முட்டை, பீட்ரூட், அரிசி மாவு உள்ளிட்டவற்றை கொண்டு புலி உருவிலான சாப்பிடக்கூடிய Bun-களை தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முந்தைய தினம், சீன அரசு தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ள கலை நிகழ்ச்சிகளின் கண்கவர் ஒத்திகைகளும் நடைபெற்றன.

சந்திர புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கடந்த ஆண்டு ஓலாங் தேசிய பூங்காவில் பிறந்த 20 பாண்டா குட்டிகள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது பாண்டா குட்டிகள் நடத்திய சேட்டைகள் காண்போரை அவற்றின் மீது காதல் கொள்ள வைத்தது குறிப்பிடத்தக்கது.

Also read:  ரூ.500-க்காக குடுமிப்பிடி சண்டையிட்ட பெண் சுகாதார ஊழியர்கள்!! - வீடியோ வைரல்

First published:

Tags: China, New Year 2022