நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் லேண்டர்..

நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் லேண்டர்..

நிலவிலிருந்து பாறை கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய சாங்க் இ-5 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

 • Share this:
  நிலவில் விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள பாறைக்கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனா திட்டமிட்டது. அதன்படி நவம்பர் 24-ஆம் தேதி சாங்க் இ-5 எனும் விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலத்தை சுமந்து சென்ற லேண்டர் 7 நாட்கள் பயணித்து நேற்றைய தினம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

  நிலவில் இதுவரை அறியப்படாத பகுதியில் இருந்து பாறைக்கற்கள், மண் உள்ளிட்டவைகளின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் 2 நாட்களில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை விண்கலம் சேகரிக்க தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு மாதிரிகளை சுமந்து கொண்டு, கேப்சூல் மீண்டும் பூமிக்கு திரும்பும். சீனாவின் மங்கோலியா மகாணத்தில் கேப்சியூலை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்துவந்த மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவின் மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: