• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா: அதிநவீன வசதிகளுடன் விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கம்!

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா: அதிநவீன வசதிகளுடன் விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நிலவில் இருந்து பாறை, மணலை பூமிக்கு கொண்டு வந்தது, செவ்வாயில் ரோவரை தரையிறக்கியது, தற்போது மூன்று விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது என ஹாட்ரிக் வெற்றியை சாதித்திருக்கிறது சீனா

  • Share this:
    தனக்கென தனியாக விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ள சீனா, அதில் பல அதிநவீன வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

    கொரோனாவை சமாளிக்கும் முயற்சிகளில் உலகம் முழுவீச்சில் இறங்கியிருக்க, ஆரவாரமின்றி விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் முக்கிய பணியை சாதித்திருக்கிறது சீனா. கடந்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து விண்வெளி தொடர்பான முயற்சிகளில் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது அந்நாடு.

    நிலவில் இருந்து பாறை, மணலை பூமிக்கு கொண்டு வந்தது, செவ்வாயில் ரோவரை தரையிறக்கியது, தற்போது மூன்று விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது என ஹாட்ரிக் வெற்றியை சாதித்திருக்கிறது சீனா.

    15 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா பங்குபெற அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது சீனா. இதற்காக 16.6 மீட்டர் நீளமும், 4.2 மீட்டர் அகலமும் கொண்ட டியான்ஹே விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த டியான்ஹே விண்கலம் தான் சீனா அமைக்க இருக்கும் 70 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தின் முக்கியமான அங்கமாகும். சீனாவின் விண்வெளி மையத்தில், விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான இடம், ஆய்வகங்கள், தொலைநோக்கி போன்றவை எல்லாம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    பூமியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு "ஷென்ஸோ டுவல்வ்" விண்கலம் மூலம் மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது சீனா. வழக்கமாக பூமியில் இருந்து செல்லும் விண்கலம், விண்வெளியில் வலம் வந்த பின் ஆய்வு மையத்துடன் இணைய இரு நாட்கள் பிடிக்கும். ஆனால் "ஷென்ஸோ டுவல்வ்" தானியங்கி முறையில் சில மணி நேரங்களிலேயே இணைந்தது.

    அதில் சென்ற விண்வெளி வீரர்கள் மூவரும் மூன்று மாதம் தங்கியிருந்து விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்த விண்வெளி நிலையத்தில் அமைந்துள்ள ரோபோ கை (robotic arm) அமைப்பு, விண்வெளி வீரர்கள் எளிதாக பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.

    இதையும் படிங்க: விலங்கு போட்டும் பூட்டி வைக்க முடியாத காதல்!..

    இந்த மையத்தில் விண்வெளி வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் வகையிலான உடற்பயிற்சிக்கூடம், அவர்கள் பூமியுடன் தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈமெயில் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடியும் பட்சத்தில் உலகில் தனக்கென பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தைக் கொண்ட ஒரே நாடாக சீனா உருவெடுக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: