சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் மூன்றாவது நாடாக மாறுவதற்கான பணியை மேற்கொண்டு வரும் சீனா, அதோடு சேர்த்து கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் வலையமைப்பை ஆதரிக்க அண்டார்டிகாவில் கிரவுண்ட் ஸ்டேஷன் எனப்படும் தரை நிலையங்களை உருவாக்க உள்ளது .
2020 ஆம் ஆண்டில், ஸ்வீடனின் அரசுக்கு சொந்தமான விண்வெளி நிறுவனம், சீன விண்கலங்களை பறக்க உதவுவதற்கும் அதனில் இருந்து தரவை அனுப்புவதற்கும் தரை நிலையங்களை வழங்கியது. ஆனால் தற்போது அந்நிறுவனம் சீனாவுடனான ஒப்பந்தங்களை புதுப்பிக்க மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சீன அண்டார்டிகாவில் உள்ள இரண்டு நிரந்தர சீன ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றான Zhongshan ஆராய்ச்சி தளத்தில் கிரவுண்ட் ஸ்டேஷன் உருவாக்க டெண்டரை அறிவித்தது. ஏலத்தில் 43.95 மில்லியன் யுவானுக்கு ( இந்திய மதிப்பில் 53.70கோடி ) சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி குரூப் அதற்காக உரிமையை பெற்றுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் தெற்கே கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள ப்ரைட்ஸ் விரிகுடாவில் அமைந்துள்ள ஜாங்ஷானில் நான்கு தரை நிலையங்களைக் காட்டும் ஒரு கலைஞரின் ரெண்டரிங் தொடர்பான விளக்கப்படங்களை சீன ஸ்பேஸ் நியூஸ் வெளியிட்டிருந்தாலும், அந்தத் திட்டத்தின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் அறிக்கையில் வழங்கப்படவில்லை.
அர்ஜென்டினாவின் படகோனியாவில் சீனாவால் கட்டப்பட்ட தரைநிலையம், அமைதியான விண்வெளி கண்காணிப்பு மற்றும் விண்கலப் பயணங்களே நிலையத்தின் இலக்கு என்று சீனா உறுதியளித்த போதிலும், அதன் உண்மையான நோக்கம் குறித்த உலகளாவிய கவலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் ராட்சச உளவு கப்பல் நிறுத்தப்பட்டு இந்திய ஏவுகணை சோதனையை உளவு பார்த்ததை, கடந்தவாரம் அமெரிக்க விமான தளத்தின் மீது உளவு பலூனை பறக்கவிட்டது என்று பல சம்பவங்கள் சீன உளவு குறித்த ஐயங்களையும் கேள்விகளையும் எழுப்பி வரும் நிலையில் இந்த அண்டார்டிகா கிரவுண்ட் ஸ்டேஷனும் ரகசிய உளவிற்காக என்ற கேள்வி எழுந்து வருகிறது
இதையும் படிங்க : உளவு பலூன் என்றால் என்ன... உளவு பார்க்க ஏன் பலூன்கள்?.. அனைத்து விபரங்களும் இங்கே!
இது மட்டும் இல்லாமல் சீனா தனது விண்வெளித் திட்டத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. 2022 இல் 50 வெற்றிகரமான ஏவுகணை சோதனைகளை நடத்தியது. தனது விண்வெளி நிலையத்தின் மூன்று தொகுதிகளில் கடைசி தொகுதியை அக்டோபரில் ஏவியது. இது தாழ்ந்த பூமி வட்டத்தில் அமைந்துள்ள இரண்டாவது விண்வெளி வசிப்பிடமாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Antarctica, China