சீனாவில் புயலால் நிலச்சரிவு எச்சரிக்கை - விமானம், ரயில் போக்குவரத்து ரத்து

மாதிரிப் படம்

டைபூன் இன்-ஃபா புயலின் காரணமாக நிலச்சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரயில், துறைமுகம், விமானப் போக்குவரத்தை ஜெஜியாங் பகுதியில் சீனா நிறுத்தியுள்ளது.

 • Share this:
  மத்திய சீனா பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இந்தநிலையில், கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் இருக்கும். அதனால், கடலில் பெரும் அலைகள் மற்றும் கடும் மழை பெய்துவருகிறது. இந்த புயல் மற்றும் மழையின் காரணமாக நிலச்சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இருப்பினும், இதுவரையில் இந்த மழையால் எந்த உயிரிழப்பும் கணக்கிடப்படவில்லை. புயல் எச்சரிக்கையின் காணமாக சிஜியாங் பகுதியில் பள்ளிகள், மார்கெட், கடைகள் உள்ளிட்டவைகளை அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சாலைப் போக்குவரத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச எச்சரிக்கையான மூன்றாம் நிலை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

  இந்த டைபூன் புயலின் காரணமாக இந்தப் பகுதியில் இயக்கப்படவிருந்த 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. சிஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹாங்ஷூவா விமான நிலையத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  கூடுதலாக மேலும் பல விமானங்களுக்கும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியிலுள்ள துறைமுகத்தில் சரக்கு மற்றும் பயணக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து கப்பல் வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக, மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக 58 பேர் வரை கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டனர்.
  Published by:Karthick S
  First published: