ஹோம் /நியூஸ் /உலகம் /

மாணவர்களிடையே அதிகரித்த வீடியோ கேமிங் போதை : செக் வைத்த சீன அரசு!

மாணவர்களிடையே அதிகரித்த வீடியோ கேமிங் போதை : செக் வைத்த சீன அரசு!

China gamers

China gamers

சிறுவர் கல்வியின் மீது சீன அரசு தற்போது அதிக கவனம் செலுத்துவதால் இந்த கடுமையான விதிகள் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலகம் முழுவதும் பல சீன வீடியோ கேம்கள் மக்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரத்திற்கும் மேல் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை சீன அரசு தடைசெய்துள்ளது. 18 வயதிற்குட்பட்ட ஆன்லைன் கேமர்கள் இனி வாரத்தில் மூன்று நாட்கள் தினசரி 1 மணி நேரம் என்ற வகையில் மொத்தமாக 3 மணி நேரம் மட்டுமே விளையாட வேண்டும் என சீனா தங்கள் நாட்டு Online gamer-களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை சீனாவின் வீடியோ கேம் ரெகுலேட்டர் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் நிர்வாகம், அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம் (Xinhua) கூறுகையில், 18 வயதிற்குட்பட்ட ஆன்லைன் கேமர்கள் இனி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் இரவு மணி முதல் இரவு 9 மணி வரை நாளொன்றுக்கு 1 மணி நேரம் என மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறி இருக்கிறது.

இது தொடர்பாக சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு: ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட பதிவு செய்யும் போது கேமர்கள் தங்கள் அடையாள அட்டைகளை (ID cards) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் வீடியோ கேம் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் மைனர்கள் தங்கள் வயதை பொய்யாக சொல்லி விட கூடாது என்பதற்காக. அதே போல வார இறுதி நாட்களை தவிர, பள்ளி விடுமுறை நாட்களில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறிது நேரம் வீடியோ கேம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

அப்போதும் கூட 1 மணி நேரம் மட்டுமே அவர்களால் வீடியோ கேம் விளையாட முடியும் என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் வாழ்வில் வீடியோ கேமிங் என்பது அவர்களை பெரிதும் அடிமைப்படுத்தி விடும் ஒன்றாக இருக்கிறது. எப்போதும் வீடியோ கேமிங் ஆர்வத்திலேயே இருப்பதால் சிறுவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. அவர்களது கல்வி, சுறுசுறுப்பு, புத்திகூர்மை உள்ளிட்டவற்றில் வீடியோ கேம்கள் விளையாடும் வெறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது என்று அந்நாட்டின் நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் நிர்வாகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Also Read: காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!

வீடியோ கேமிங் விளையாட 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. என்றாலும் வீடியோ கேம் சேவையை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரம் தவிர பிற நேரங்களில் சிறுவர்களுக்கு கேமிங் சேவைகளை வழங்க சீன அரசு தடை விதித்துள்ளது. சிறுவர் கல்வியின் மீது சீன அரசு தற்போது அதிக கவனம் செலுத்துவதால் இந்த கடுமையான விதிகள் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.

சீன அரசு தற்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கை 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வீடியோ கேம்களுக்கு அடிமையாக இருப்பதை பற்றிய நீண்டகால கவலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. சமீபத்திய கட்டுப்பாடுகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் சீன அரசு நடத்தும் பொருளாதார தகவல் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாகிவிட்டதாகவும், அது அவர்களுக்கும், நாட்டிற்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சிறார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மக்களின் முக்கிய நலன்களுடன் தொடர்புடையது" என்று சீன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முன்னதாக 18 வயதிற்குட்பட்டவர்கள் எந்த நாளிலும் 1.5 மணிநேரமும், விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் வீடியோ கேம் விளையாடலாம் என்று அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் தான் வாரத்திற்கு மூன்று மணி நேரம் மட்டுமே இனி 18 வயதிற்குப்பட்டோர் வீடியோ கேம் விளையாடலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: China, Video Games