மேப் மூலம் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை கொடுக்கும் சீனா!

எப்போதும், ஆஸாத் காஷ்மீரை இணைத்து பாகிஸ்தானின் வரைபடத்தை காட்டும் சீன அரசு ஊடகம் தற்போது, காஷ்மீரை விட்டு பாகிஸ்தானை மட்டும் காட்டியுள்ளது.

news18
Updated: November 30, 2018, 5:00 PM IST
மேப் மூலம் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை கொடுக்கும் சீனா!
சீனா - பாகிஸ்தான் தேசியக்கொடிகள்
news18
Updated: November 30, 2018, 5:00 PM IST
பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருக்கும் விதமாக எப்போதும் வரைபடத்தை காட்டிவரும் சீன அரசு ஊடகம், தற்போது காஷ்மீர் இல்லாமல் காட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. ஆஸாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியை விடுதலைக்குப் பின்னர் நடந்த ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பாகிஸ்தான் தனது வசப்படுத்தியது.

தீராத பிரச்னையாக உள்ள காஷ்மீர் விவகாரம், இரண்டு நாடுகளிலும் கட்சிகள் அரசியல் செய்யவும் பயன்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் சீனா, இந்த ஆஸாத் காஷ்மீர் வழியாக சாலைகள் அமைத்து வணிகப் போக்குவரத்தை செயல்படுத்தி வருகின்றது.

கடந்த வாரம் கராச்சியில் உள்ள சீன தூதரகம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 போலீசார் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். சீனாவைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்றாலும், கராச்சி தாக்குதல் சம்பவம் சீனாவை கோபப்படுத்தியுள்ளது.

ஆஸாத் காஷ்மீர் இல்லாமல் சீனா காட்டிய பாகிஸ்தான் வரைபடம் (Photo: Twitter/@CGTNOfficial)


அரசின் உத்தரவின் படியே இயங்கிவரும் சீன அரசு ஊடகம், இதற்கு முன் இல்லாத முறையாக பாகிஸ்தானின் வரைபடத்தை மாற்றிக் காட்டியுள்ளது, தங்களது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அந்நாட்டுக்கு மறைமுகமாக கொடுக்கும் எச்சரிக்கை என்று கூறப்படுகிறது.

Also See..
Loading...
First published: November 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...