Home » News » International » CHINA SENDS LAST BEIDOU SATELLITE INTO SPACE RIZ

20 ஆண்டு கால முயற்சி: சொந்த புவியிடங்காட்டியை உருவாக்கிய சீனா

தனது 20 ஆண்டு கால முயற்சியில் அமெரிக்காவின் ஜிபிஎஸ்-க்கு மாற்றாக புவியிடங்காட்டியை உருவாக்கியிருக்கிறது சீனா.

20 ஆண்டு கால முயற்சி: சொந்த புவியிடங்காட்டியை உருவாக்கிய சீனா
புவியிடங்காட்டி அமைப்பான (Beidou)-வின் கடைசி செயற்கைகோளை சீனா ஏவியுள்ளது (படம்: Reuters)
  • Share this:
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய புவியிடங்காட்டி அமைப்பான பெய்டு (Beidou)-வின் கடைசி செயற்கைகோளையும் சீனா வெற்றிக்கரமாக ஏவியிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் புவியியல் இருப்பிடத்தை அறிந்துக் கொள்ள புவியிடங்காட்டிகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த முயற்சியில் இறங்கி கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சீனா, இந்த தொழில்நுட்பத்தின் கடைசி செயற்கைகோளை இன்று காலை விண்ணில் ஏவியது.

இனி சீனா புவியியல் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கு அமெரிக்காவின் ஜி.பி.எஸ் அமைப்பை சார்ந்திருக்கும் நிலை மாறியிருக்கிறது. அமெரிக்காவுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பெய்டு தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading