சீனா மக்கள் தொகை 141.12 கோடியாக அதிகரிப்பு

சீனா

சீனாவின் மக்கள் தொகை 2019ல், 140 கோடியாக இருந்தது. இது 2020ல், 0.53 சதவீதம் உயர்ந்து, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது.

  • Share this:
    10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 1.412 பில்லியன் என்று தரவுகள் கூறுகின்றன.

    ஆனால் இந்த கணக்கெடுப்புக்கு 10 ஆண்டுகள் முன்னால் எடுத்த கணக்கெடுப்பிலிருந்து மக்கள் தொகையில் 5.38% தான் அதிகரித்துள்ளது. இது மிகவும் குறைந்த அளவு மக்கள் தொகை பெருக்கம் என்று சீனா தரப்பில் கூறப்படுகிறது.

    10 ஆண்டுகளாக ஆண்டுவாரி சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.53% தான் இது 1950-ம் ஆண்டுகளின் சராசரியை விட குறைவு என்கின்றன புள்ளி விவரங்கள்.

    சீனாவின் மக்கள் தொகை 2019ல், 140 கோடியாக இருந்தது. இது 2020ல், 0.53 சதவீதம் உயர்ந்து, 141.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், 60 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 18.7 சதவீதம் அதிகரித்து, 26.40 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 15 - 59 வயதுள்ளோர் எண்ணிக்கை 6.79 சதவீதம் சரிவடைந்து, 89.40 கோடியாக குறைந்துள்ளது.

    சீனாவில் பிறப்பு விகிதமும், 22 சதவீதம் சரிவடைந்து, 1.46 கோடியில் இருந்து, 1.20 கோடியாக குறைந்துள்ளது. அதுபோல 100 பெண்களுக்கு, 105.20 ஆண்கள் என்ற விகிதம், 105.07 ஆக சரிவடைந்துள்ளது.

    கடந்த 1985ல் அறிமுகப்படுத்தப்பட்ட, 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' திட்டம் காரணமாக சீனாவில் மக்கள் தொகை குறைந்தது. இதனால் கவலை அடைந்த அரசு 2016ல், அத்திட்டத்தை ரத்து செய்து, 'நாம் இருவர், நமக்கு இருவர்' திட்டத்தை அமல்படுத்தியது. எனினும், சீன அரசின் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக, இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே உள்ளது.

    சீனாவில் 2025ம் ஆண்டுக்கு பின், மக்கள் தொகை வளர்ச்சி இருக்காது எனக் கூறப்படுகிறது. 2050ல், அமெரிக்காவை விட முதியோர் பராமரிப்பு அதிகமாகவும், வேலை செய்யும் ஆற்றல் உள்ள இளைஞர்களின் பங்கு குறைவாகவும் இருக்கும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. இதையொட்டி சீன அரசு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய கொள்கைகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.
    Published by:Muthukumar
    First published: