• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனா, ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - கட்டுப்பாடுகள் தீவிரம்

சீனா, ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - கட்டுப்பாடுகள் தீவிரம்

கொரோனா

கொரோனா

சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பரிசோதனைகளை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.44 கோடியைத் தாண்டியுள்ளது. 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்களை செலுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். டெல்டா வகை தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளதால், பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிப்புக்குள்ளாவோரை சமூக அளவில் தனிமைப்படுத்தவும் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.

    பொதுமக்கள் முககவசங்கள் அணியவும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிப்புக்குள்ளாவோரின் தொடர்புகளை கண்டறிவதிலும் அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர்.

    பிஜிங்-கின் சாங்பீங் மாவட்டத்தில் உள்ள ஹாங்ஃபுயுவான் (Hongfuyuan ) அதிக ஆபத்துள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு முற்றிலும் மூடப்பட்டுள்ளது. அங்கு 23 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கு அதிகமான சுகாதார பணியாளர்கள், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட நியூக்ளிக் அமில சோதனையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்காவில் 5 முதல் 11 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.  ரஷ்யாவில் ஞாயிற்று கிழமை ஒரே நாளில் 35,660 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 1,072 பேர் உயிரிழந்தனர்.

    அங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மாஸ்கோவில் மட்டும் வரும் 28-ஆம் தேதி முதலே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: