உலகிலேயே முதன்முறையாக சீனாவில் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல் பாதிப்பு

பறவைக் காய்ச்சல்

ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஜென்ஜியாங் பகுதியில் வசிக்கும் இந்த நபருக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

 • Share this:
  சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதாகும் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் முதன்முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு கண்டறியப்படுவது இது முதன்முறையாகும்.

  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மகாணத்தில் இருந்து தான் பரவியது தான் என்பதே அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடுமையான கோபத்தில் உள்ளது. இதனிடையே தற்போது சீனாவில் உள்ள ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

  ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஜென்ஜியாங் பகுதியில் வசிக்கும் இந்த நபருக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மே 28ஆம் தேதி அந்த நபர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

  Also Read : கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய பரிசோதனைகள் என்ன?

  மேலும் பாதிப்பு ஏற்பட்டட அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர் . அவர்களில் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சலிலும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை பறவை காய்ச்சல்கள் சீனாவில் மனிதர்கள் மத்தியில் அவ்வப்போது பரவுவது வழக்கமான ஒரு நிகழ்வுதான். கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் H7N9 பறவை காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

   
  Published by:Vijay R
  First published: