ஹோம் /நியூஸ் /உலகம் /

மறுபடி முதல்ல இருந்தா? சீனாவில் ஷாக் கொடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 7,691 பேர் பாதிப்பு!

மறுபடி முதல்ல இருந்தா? சீனாவில் ஷாக் கொடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 7,691 பேர் பாதிப்பு!

சீனாவில் கொரோனா பரவல்

சீனாவில் கொரோனா பரவல்

நிதி மையமான ஷாங்காயில் மூன்று அறிகுறியற்ற வழக்குகள் மட்டுமே உள்ளது. ஆனால் எந்த அறிகுறியுடன் கூடிய தொற்றும் இல்லை என்று ​​உள்ளூர் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சீனாவில் நவம்பர் 7 ஆம் தேதி மட்டும் 7,691 புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 890 அறிகுறிகளும் 6,801 அறிகுறிகளும் இல்லை என்று தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒப்பிடுகையில் ஒற்றை நாள் எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும்.

  அதற்கு ஒரு நாளுக்கு முந்தைய நிலவரப்படி 569 அறிகுறி மற்றும் 5,074 அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் என மொத்தம் 5,643 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஆனால் முந்தைய தினத்தைப் போல புதிய இறப்புகள் எதுவும் நேற்று பொதுவாகவில்லை.

  சீனாவில் தற்போது வரையான இறப்பு எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. நவம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி, சீனாவின் பிரதான நிலப்பரப்பு 265,013 நோயாளிகளை கொரோனா அறிகுறிகளுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

  சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 31 நோய் தொற்று அறிகுறிகளும் 33 அறிகுறியற்ற தொற்றுகளும் பதிவாகியுள்ளன. பெய்ஜிங் நகரத்தின் முந்தைய நாள் கணக்குப்படி 41 அறிகுறி மற்றும் 18 அறிகுறியற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

  இதையும் படிங்க : கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் உயரமான பெண்ணின் முதல் விமான பயணம்.. சாத்தியமானது எப்படி?

  நிதி மையமான ஷாங்காயில் மூன்று அறிகுறியற்ற வழக்குகள் மட்டுமே உள்ளது. ஆனால் எந்த அறிகுறியுடன் கூடிய தொற்றும் இல்லை என்று ​​உள்ளூர் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. தெற்கு தொழில்நுட்ப மையமான ஷென்சென் பகுதியில் ஒரு புதிய உள்நாட்டில் பரவும் COVID-19 தொற்றுநோயைக் கண்டறிந்துள்ளனர்.

  தெற்கிலும் உள்ள குவாங்சோவில், 114 புதிய உள்நாட்டில் பரவும் அறிகுறி தொற்றும் மற்றும் 2,263 அறிகுறியற்ற தொற்றுகள் பதிவாகியுள்ளன.

  2019 க்கு பிறகு பல ஊரடங்குகளை விதித்தும் சீனாவில் கொரோனா எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 6 மாதங்களில் மீண்டும் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது 6 மாதங்களில் இல்லாத அளவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: China, Corona, Covid-19