முகப்பு /செய்தி /உலகம் / சீனாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு - தகவல் வெளியான சில நிமிடத்தில் 120 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த குரங்கம்மை #ஹேஷ்டேக்!

சீனாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு - தகவல் வெளியான சில நிமிடத்தில் 120 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த குரங்கம்மை #ஹேஷ்டேக்!

குரங்கம்மை

குரங்கம்மை

சீனாவில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு முதல் குரங்கம்மை பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaChinaChinaChinaChina

சீனாவில் முக்கிய நகரமான சோங்கிங் பகுதியில் முதல் குரங்கம்மை நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் இருந்து வருபவருக்கு பின்பற்றப்படும் தடுப்பு நடவடிக்கையாக அவர் கொரோனா பரிசோதனை அறையில் இருந்தபோது ஏற்பட்ட அறிகுறிகள் காரணமாகப் பரிசோதனை செய்யும்போது அவருக்கு குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமை படுத்திப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சீனா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த செய்தி வெளியாகி ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சீனா சமூக ஊடக தலமான வெய்போவில் சோங்கிங் பகுதி குரங்கம்மை பாதிப்பு குறித்த ஹேஷ்டேக் 120 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து குரங்கம்மை பாதிக்கப்பட்டவரின் தகவல் வெளியானது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த 30 வயது நபருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விமான நிலையத்தில் இருந்து எங்கும் செல்லவில்லை என்பதால் வெளியில் பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பிலிப்பைன்ஸ் வருவதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குச் சென்றுள்ளார் .

மேலும் அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில் சீனாவின் முக்கிய நகரங்களில் பெரும் பயம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் சீனாவின் ஜீரோ கொரோனா கொள்கை.

Also Read : மன்னர் சார்லெஸ் காரில் மோத சென்ற நபர்... வைரலாகும் பரபரப்பு காட்சிகள்

கொரோனா பாதிக்கப்பட்ட பல நகர மற்றும் கிராமப் பகுதிகளில் கட்டுப்பாடு நடவடிக்கையாகச் சீனா அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்பது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பரவிய காணொளிகள் மூலம் தெரியவந்தது. மேலும் சில பகுதியில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர் என்று ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை அதிபராவதற்கு முனைப்புக் காட்டுவதால் சில தளர்வுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: China, Monkeypox