ஹோம் /நியூஸ் /உலகம் /

லாக்டவுன் போட்டும் பிரயோஜனம் இல்லை... சீனாவில் மீண்டும் உச்சம் கண்ட கொரோனா!

லாக்டவுன் போட்டும் பிரயோஜனம் இல்லை... சீனாவில் மீண்டும் உச்சம் கண்ட கொரோனா!

சீனாவில் மீண்டும் உச்சம் கண்ட கொரோனா

சீனாவில் மீண்டும் உச்சம் கண்ட கொரோனா

கடுமையான தொடர் லாக்டவுனுக்கு மத்தியிலும் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சம் கண்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaBeijingBeijing

  உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

  அதேவேளை, இன்னும் கொரோனாவை விரட்ட முடியாமல் சீனா தவித்து வருகிறது. சீனாவில் கோவிட் பரவலை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசி (Zero Covid Policy) என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது. இந்த நடைமுறையால் அந்நாட்டின் குடிமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் எனவும், பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது எனவும் புகார் எழுந்து வருகிறது. இவ்வாறு ஜீரோ கோவிட் நடைமுறையை சீனா கடைப்பிடித்தாலும், அந்நாட்டில் மீண்டும் கொரோனா உச்சம் கண்டுள்ளது. ஆறு மாதத்தில் இல்லாத அளவிற்கு அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  அந்நாட்டில் 5,600க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்பு குவாங்டாங் என்ற பிராந்தியத்தில் உள்ளது. இந்த பகுதி சீனாவின் முன்னணி உற்பத்தி மையமாக உள்ளதால், அந்நாட்டில் உற்பத்தி சங்கிலி பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மத்திய சீனாவிலும் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உலகின் மிகப்பெரிய ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: வரலாறு காணாத வறட்சி..கென்யாவில் கொத்து கொத்தாக மடியும் காட்டு விலங்குகள்.. 200க்கும் மேற்பட்ட யானைகள் மரணம்!

  எனவே, ஐபோன்னுக்கு ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அதை பெறுவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜீரோ கோவிட் திட்டத்தின் கட்டுப்பாடுகளை பொறுக்க முடியாமல் அந்நாட்டு மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: China, Corona, Lockdown