ஹோம் /நியூஸ் /உலகம் /

மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்? -தைவான், ஹாங்காங் குறித்து முக்கிய முடிவு.. சீனாவில் நடப்பது என்ன?

மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்? -தைவான், ஹாங்காங் குறித்து முக்கிய முடிவு.. சீனாவில் நடப்பது என்ன?

சீனா

சீனா

சீனாவில் அதிபரான ஜி ஜின்பிங், சீனா கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டத்தில் தைவான் மற்றும் ஹாங்காங்கில் சீனாவின் நிலைப்பாடு குறித்துப் பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaBeijingBeijing

  சீனாவில் 5 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய காங்கிரஸ் முக்கிய பொதுக் கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதனை அதிபரும் கட்சியில் தலைவருமான ஜி ஜின்பிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

  அதிபர் ஜி ஜின்பிங்கில் ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் மூன்றாம் முறையும் அவரே ஆட்சியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போது கூட்டம் கூடியுள்ளது.

  பலத்த கர ஓசையுடன் மேடையில் உரையைத் தொடங்கிய ஜி ஜின்பிங் தைவானில் நிலவும் சூழ்நிலை பற்றிப் பேசினார். தைவான் மேல் சீனா பலத்தை உபயோகிப்பதை நிறுத்தாது என்றும் தைவானைச் சீனாவுடன் இணைப்பதற்கு முற்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

  மேலும் ஹாங்காங்கை குழப்பத்தில் இருந்து மீட்டு நிலைப்பாடான அரசைச் சீனா உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவரின் ஆட்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஜீரோ கொரோனா கொள்கை பற்றிப் பேசினார்.

  Also Read : ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 11 வீரர்கள் மரணம்!

  அதில் நமது மக்களும் அவர்களில் உயிரும் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திட்டங்கள், பருவ நிலை மாற்றம், லஞ்ச ஒழிப்பு, உலக அரங்கில் சீனாவில் நிலைப்பாடு, ராணுவ பலத்தை அதிகரிப்பது மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றைப் பற்றிப் பேசியுள்ளார்.

  தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் இந்த தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் முடிவில் ஜி ஜின்பிங் மீண்டும் மூன்றாம் முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் இருந்து ஆட்சியில் உள்ள அதிபர் ஜி ஜின்பிங், சீனா வரலாற்றில் மாவோ சேதுங்-கிற்கு பிறகு பெரும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: China, Xi jinping