முகப்பு /செய்தி /உலகம் / 3-ம் முறை சீனாவின் அதிபர் பதவியில் ஜி ஜின்பிங்...பிரதமர் மற்றும் இதர தலைவர் நியமிப்பு..

3-ம் முறை சீனாவின் அதிபர் பதவியில் ஜி ஜின்பிங்...பிரதமர் மற்றும் இதர தலைவர் நியமிப்பு..

அதிபர் ஜி ஜின்பிங் & பிரதமர் லி கியாங்

அதிபர் ஜி ஜின்பிங் & பிரதமர் லி கியாங்

சீனாவின் அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பிரதமராக அவரின் நம்பிக்கைக்கு உரிய லி சியாங் பதவியேற்றுக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaBeijing Beijing

சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தநிலையில் தற்போது மூன்றாம் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார். மேலும் அவர் அரசின் முக்கிய பதவிகளுக்கான தலைவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

சீனாவைப் பொருத்தவரை சீனா கம்யூனிஸ்ட் கட்சி(CCP) என்ற ஒரே கட்சிதான் அரசியல் கட்சியாக உள்ளது. அதிலுள்ள உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நபர் தான் அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் அமர முடியும். அதன்படி அதிபர் ஜி ஜின்பிங் அதிகப்படியான ஒப்புதலுடன் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சிசிபி-யில் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் சீனாவின் புதிய பிரதமராக லி சியாங் பதவியேற்றுக்கொண்டார்.

லி-க்கு எதிராகப் பிரதமர் பதவிக்கு ஒருவர் கூட போட்டியிடவில்லை. தலைநகர் பீய்ஜிங்கில் அதிகாரபூர்வ பிரதமராக லி சியாங் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த லிசியாங், ஜீரோ கோவிட் கொள்கையை சிறப்பாகச் செயல்படுத்தியவர் ஆவார். சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர்களாக ஜாங் யூக்ஸியா, ஹீ வீடாங் (Zhang Youxia, He Weidong) ஆகியோரும் நியமிக்கப்பட்டு முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

Also Read : தூக்கம் வந்தாலும் தொல்லைதானா?... தினமும் 22 மணி நேரம் உறங்கும் பெண்... அரியவகை நோயால் ஏற்பட்ட பாதிப்பு..!

2019ம் ஆண்டு கொரோனா கண்டறியப்பட்ட, ஹூபே மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளராக இருந்த Ying Yongக்கு கருவூலம் மற்றும் நீதித்துறையின் முக்கிய பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: China, Xi jinping