ஹோம் /நியூஸ் /உலகம் /

60 ஆண்டு வரலாற்றில் முதல் முறை.. சீனாவில் மக்கள்தொகை சரிவு - கவலையில் அரசு

60 ஆண்டு வரலாற்றில் முதல் முறை.. சீனாவில் மக்கள்தொகை சரிவு - கவலையில் அரசு

சீனா மக்கள்தொகை சரிவு

சீனா மக்கள்தொகை சரிவு

சீனாவின் மக்கள்தொகை ஒரே ஆண்டில் சுமார் 8.5 லட்சம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • intern, IndiaBeijingBeijing

உலகின் மிக பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக திகழ்வது சீனா. சீனாவின் மக்கள் தொகை 140 கோடிக்கும் மேல் உள்ள நிலையில், அந்நாட்டின் கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத ஒரு சம்பவம் 2022இல் நிகழ்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை கணக்கிடும் தேசிய புள்ளிவிவர அமைப்பு(NBS), மக்கள்தொகை கணக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது சீனாவின் மக்கள் தொகை 1,411,750,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 141 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.5 லட்சம் குறைவாகும்.

இதன் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைத்துள்ளது. கடைசியாக 1960இல் மா சேதுங் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போது தான் சீனாவில் மக்கள்தொகை சரிவை கண்டது. பின்னர் சீனாவில் மக்கள்தொகை வெகுவாக உயரத் தொடங்கியதால் 1980இல் இருந்து அந்நாட்டு மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என அரசு கொள்கை முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த கொள்கை முடிவு சமீப காலமாக சீனாவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் உயரத் தொடங்கியுள்ளது. கடந்தாண்டில் 95.6 லட்சம் பேர் புதிதாக பிறந்துள்ள நிலையில், ஒரு கோடியே 41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், அங்கு இளம் வயதினரின் விகிதத்தை விட முதியோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரா வளர்ச்சி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க: தொட முடியாத மாஃபியா.. 30 ஆண்டுகாலம் தப்பித்து ஓடிய ரவுடியை அசால்டாக கைது செய்த போலீஸ்!

தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2021ஆம் ஆண்டில் சட்ட விதியை மாற்றி அமைத்தது.சில மாகாணங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கி அரசே ஊக்குவிக்கின்றது. இந்த முடிவுகள் எதிர்பார்க்கும் பலனை தருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சீனாவின் மக்கள்தொகை சராசரியாக 1.1 சதவீதம் சரிவை சந்திக்கும் என ஷாங்காய் அகாடமி ஆய்வு தெரிவிக்கிறது.

First published:

Tags: China, Population