ஹோம் /நியூஸ் /உலகம் /

விண்வெளிக்கு பறக்கும் குரங்குகள்.. இனப்பெருக்க ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டம் செல்லும் சீனா!

விண்வெளிக்கு பறக்கும் குரங்குகள்.. இனப்பெருக்க ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டம் செல்லும் சீனா!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விண்வெளிக்குக் குரங்குகளை அனுப்பி சீனா ஆராய்ச்சி செய்யவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaChinaChina

  குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதனின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்யச் சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  சீனா தற்போது புதிதாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகின்றனர். அதில் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளனர். அப்படி விண்வெளியில் வளர்ச்சி மற்றும் உடலியல் மாறுபாடு பற்றிய ஆராய்ச்சி நடத்தக் குரங்கை விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளனர்.

  விண்வெளியில் குரங்கின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையைத் தெரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆராய்ச்சியாளரான ஜாங் லு, இது குறித்துக் கூறுகையில், விலங்குகளைக் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையாகக் கூற்றுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

  விண்வெளியில் உள்ள சுற்றுச்சூழலில் உயிரினங்கள் பூமியில் உள்ளது போல் இயங்க முடிவில்லை. முன்னதாக ரஷ்யா மேற்கொண்ட ஆராய்ச்சியில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டுவரப்பட்ட உயிரினங்களுக்கு இடையே இனப்பெருக்க ஏற்படவில்லை. அதனால் இதில் பல விதமான சிரமங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  இதர விலங்குகளைவிடவும் குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதால் குரங்கை விண்வெளி சுற்றுச்சூழலில் வைத்து ஆராய்ச்சி நடத்தினால் தேவையாக முடிவுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Also Read : மோசமான வானிலையால் ஆற்றில் விழுந்த விமானம்! பயணிகளைத் தேடும் மீட்புப்படை!

  உலக அளவில் பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இது போன்று உயிரின ஆராய்ச்சிகள் அவசியமாகவுள்ளது என்று சிங்குவா பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் கீ கூறியுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: China, Monkey, Space