ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் மீண்டும் ஊரடங்கு... அரசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் தீவிரம்

சீனாவில் மீண்டும் ஊரடங்கு... அரசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் தீவிரம்

சீனா போராட்டம்

சீனா போராட்டம்

சீனாவின் பல மாகாணங்களிலும் ஊரடங்கை தளர்த்தக் கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடும் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, Indiachinachinachina

கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியதால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து பொதுமக்கள் போராடவும் தொடங்கியுள்ளனர். போராட்டங்கள் வீரியமடைந்து வருவதால் அரசு திணறி வருகிறது.

கொரோனா என்னும் கொடிய நோய் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவி உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனோ நோயால் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா நோய் பரவல் 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது பெரும்பாலான உலக நாடுகளில் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.

ஆனால் எங்கிருந்து கொரோனா பரவத் தொடங்கியதோ, அதே சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சீனாவில் அதி வேகமாக கொரோனா பரவி வருவதால் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் பெய்ஜிங், ஜின்ஜியாங், குவாங்ஜோ உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

2020ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் சீனா தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. சீனாவில் ஒரு நாளைய நோய் தொற்று பதிவு 30 ஆயிரத்தை தாண்டிவருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அந்நாட்டு  பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.

இதையும் படிங்க:  கத்தாரை கதிகலங்க வைக்கும் ஒட்டகக் காய்ச்சல்! உலகக்கோப்பை கால்பந்துக்கு அடுத்த சிக்கல்!

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அவர் வசிக்கும் குடியிருப்பு, அதை சுற்றிய பகுதியை முடக்கி அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் ஒட்டு மொத்த நகருக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக, 4 லட்சம் மக்கள் வசிக்கும் மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கி நகரில் 100 நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கால் மீட்பு பணிகள் தாமதமடைந்த நிலையில் தீயில் கருகி 10 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்நகரில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அடித்து விரட்டியதால் வன்முறை ஏற்பட்டது.

Also read: கடற்கரையில் 2500 பேர் கூடி நிர்வாண போட்டோஷூட்.. விழிப்புணர்வுக்காக நடந்த முக்கிய நிகழ்வு!

இதனால் உரும்கி நகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதே போல, பல மாகாணங்களிலும் ஊரடங்கை தளர்த்தக் கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடும் சம்பவங்கள் தீவிரமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் முக்கியமான வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் விதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஊரடங்கை முற்றிலும் விலக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சீன அரசு திணறி வருகிறது.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

First published:

Tags: China, Lockdown