• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஹோம்வோர்க், டியூசன்... குழந்தைகளுக்கு அழுத்தம் கூடாது: சீனா புதிய சட்டம்

ஹோம்வோர்க், டியூசன்... குழந்தைகளுக்கு அழுத்தம் கூடாது: சீனா புதிய சட்டம்

சீனா கல்வி சட்டம்

சீனா கல்வி சட்டம்

குழந்தைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் விதமாக சீனா கல்வி சட்டத்தை இயற்றியுள்ளது. தனியார் பயிற்சிகளை (டியூஷன்) தடை செய்வது,  குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் நேரத்தை வரையறுப்பது போன்றவையும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    சீனாவில் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக குடும்ப கல்விச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டுப்பாடம், டியூசன் என பெற்றோர், குழந்தைகளின் மீது கல்வி தொடர்பான அழுத்தம் தருவது தடை செய்யப்படுகிறது.

    சீனாவின் அரசு ஊடகமான சின்ஹுவா ( Xinhua ) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகளின் வீட்டுப்பாட அழுத்தங்களை குறைக்கும் விதமாக சீன அரசு  கல்விச் சட்டம் இயற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் நடவடிக்கைகள் குறித்து சமீபத்திய மாதங்களில்  சீனா எடுத்துவரும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.

    இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகளின் கல்வி, ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை சமநிலைப் படுத்தும் வகையில் பெற்றோர் செயல்பட வேண்டும் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் அவர்கள் மீதான அழுத்ததையும் இணைய பயன்பாட்டு நேரத்தையும் குறைக்க முடியும் என சீன கருதுகிறது.

    சீனாவின் கல்வி முறை என்பது மாணவர்கள் சிறு வயதிலேயே தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மிகவும் கடினமனாதாக கூறப்படும் Gaokao தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற, தனியார் டியூசன் மையங்களில் அவர்களை சேர்த்து ஏராளமான பணத்தை செலவிடுவதில் கொண்டுபோய் இது விடுகிறது. எனவே, பெற்றோர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பது மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையிலும் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டெல்டா வைரஸால் சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பு!


    தனியார் பயிற்சிகளை (டியூஷன்) தடை செய்வது,  குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் நேரத்தை வரையறுப்பது போன்றவையும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    சீன அரசாங்கம் சீனாவின் இளைஞர்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதும் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட முயன்றது. சிறார்களை வாரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆன்லைன் கேம்களை விளையாடுவதை தடை செய்துள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு மணிநேரம் ஆன்லைன் கேம்களை விளையாட அனுமதித்துள்ளது.

    மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா..மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை: சீனா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: